பிரபாஸ் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கி, ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியான ‘கல்கி 2898 கிபி’ உலகம் முழுவதும் இதுவரை 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெளியான இந்த திரைப்படம் 28 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய சாதனையை படைப்பதற்காக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.