இந்தியன் 2 திரைப்படத்தின் விளம்பர சுற்றுப் பயணத்தில் மலேசியா சென்றிருந்த உலகநாயகன் கமல்ஹாசன், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தார்.
இந்திய, மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்தும் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர். சந்திப்பின்போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தார்.