ஜெயா தொலைக்காட்சியில் வரும் தீபாவளி தினத்தன்று காலை 11.30க்கு கலக்கல் காமெடி கேங்ஸ்டர் நிகழ்ச்சியில் சின்ன திரை நட்சத்திரங்கள் மற்றும் நமது கேங்ஸ்டர் அணியாளர் கலந்து கொள்ளும் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை வசுந்தரா மற்றும் நந்தா மாஸ்டர் இருவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கேங்ஸ்டர் குழுவினர் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்று பிரிந்து இரு குழுக்களாக மோதிக் கொள்ளும் நகைச்சுவை யுத்தம் மறும் ஆட்டம்,பாட்டம் நகைச்சுவைக் கொண்டாட்டம் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் டி.ராஜரத்தினம் தயாரித்து இயக்கிவருகிறார்.
மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு சிறப்பு நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கமல் தொகுத்து வழங்குகிறார்.