பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, இந்த ஆண்டு ZEE5 தளம் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஜனவரி 14-ம் தேதி அவனியாபுரத்திலும், 15-ம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது. இதன் மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சார மகத்துவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ZEE5 இன் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளின் நேரடி ஸ்ட்ரீமிங், தமிழ்நாட்டின் நேசத்துக்குரிய மரபுகள் எல்லைகளைக் கடந்து செல்வதை உறுதிசெய்கிறது, இதனால் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து திருவிழாவின் கொண்டாட்டத்தையும் பெருமையையும் அனுபவிக்க முடியும். இந்த நிக்ழவு பிராந்திய கலாச்சாரங்களைக் கொண்டாடுவதற்கும், அர்த்தமுள்ள மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கம் மூலம், பல்வேறு பார்வையாளர்களை இணைப்பதற்கும் ZEE5 இன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ZEE5 ஆனது ₹49 மாதாந்திர சந்தா பேக்கை வழங்குகிறது, ZEE5 தளம் பார்வையாளர்களை வழங்கும் வகையில், தமிழ்நாட்டின் துடிப்பான பாரம்பரியங்கள் மற்றும் கதைகளைப் பிரதிபலிக்கும் பிரத்தியேக உள்ளடக்க வரிசையில் பல படைப்புகளை வழங்கி வருகிறது.