30 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, திரில்லர் சப்ஜெக்டில் உருவாகியுள்ள படம் ‘ஜெர்க்.’
அப்புகுட்டி, நாடோடிகள் பரணி, குமரவடிவேல், ஃபிராங்ஸ்டர் ராகுல், காயத்ரி, யாத்திசை படத்தில் நடித்த சித்து குமரேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மற்ற கதாபாத்திரங்களில் குட்டி கோபி, ஃபிராங்ஸ்டர் அசார், பிரேமா, சூப்பர்குட் சுப்ரமணி, ராஜ்குமார், பழனிச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். குரு இயக்கியுள்ளார்.
படத்தை தயாரித்துள்ள ‘2K புரொடக்ஷன்ஸ்’ குழுவினர் நம்மிடம் பேசியபோது, ‘‘மலைப் பிரதேசங்களில் இயற்கை வளத்தையும், நம் மண்ணையும், பல தலைமுறைகளாக தங்களது உழைப்பால் பாதுகாத்து வரும் மக்கள் முதலாளித்துவத்தால் இன்று வரை அடிமைபட்டுத் தான் கிடக்கிறார்கள். அவர்களது முன்னேற்றம் இன்றுவரை கேள்விக் குறியாகவே இருக்கிறது.
அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத் தொடர்பே இல்லாத தமிழகத்தின் ஒரு முக்கியமான மலைபிரதேசத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த மலைப்பகுதியில் நடத்தியிருக்கிறோம்.
இந்த பாடல்களுக்கும் தரண் குமார் சிறப்பாக இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ‘ஜாலியோ ஜூம்கானா’ பாடலை எழுதி பிரபலமான கு.கார்த்திக் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
‘நீல மலையே’ என்ற பாடலை அயப்பனும் கோஷியும் படத்தில் பாடியதற்காக தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சமாள் பாடியிருக்கிறார். ‘உன்னை போல யாருமில்ல’ என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமியும், ‘மஜா மஜா’ என்ற பாடலை செந்தில் ராஜலட்சுமியும் பாடியிருக்கிறார்கள்.
நிச்சயம் இந்த பாடல்கள் இந்த வருடத்தின் வெற்றிப் பாடலாக அமையும். இணையதளங்களிலும் வைரலாகும் என நம்புகிறோம்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரையரங்குகளில் வெளியிடவிருக்கிறோம்” என்றார்கள்.
படக்குழு:
தயாரிப்பு: 2K புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு: ஆலன் பரத்
எடிட்டிங்:சுனில் காசிப்
ஸ்டண்ட்: மிரட்டல் செல்வா
கலை: அன்பரசு
நடனம்: இருசன்
மக்கள் தொடர்பு: மணவை புவன்
‘ஜெர்க்’ படத்தின் ஸ்டில்ஸ்