Tuesday, April 22, 2025
spot_img
HomeCinema'ஹனு மான்' படத்திலிருந்து 'ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்' நான்காவது பாடல் வெளியீடு!

‘ஹனு மான்’ படத்திலிருந்து ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்’ நான்காவது பாடல் வெளியீடு!

Published on

தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘ஹனு மான்’ படத்தினை விளம்பரப்படுத்துவதிலும்,அதன் மூலம் ரசிகர்களிடம் உற்சாகத்தை அதிகரிப்பதிலும் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரியளவில் வரவேற்பை பெற்றது. அதையடுத்து படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களை இதுவரை வெளியிட்டுள்ளனர். அவை அனைத்தும் சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான வகையில் உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

இப்போது ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் நான்காவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தின் பாடல் -இசையமைப்பாளர் கௌரஹரியின் இசை கோர்வையில் உருவாகி இருக்கிறது. இந்தப் பாடலை சாய் சரண் பாஸ்கருணி, லோகேஷ்வர் இடாரா மற்றும் ஹர்ஷவர்தன் சாவேலி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.‌ இப்பாடலுடன் வெளியிடப்பட்டிருக்கும் 3D தொழில்நுட்பத்திலான விளக்கக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதனை நாம் திரையில் காட்சிகளுடன் காணும் போது வியப்பில் ஆழ்த்துவது உறுதி. முதல் மூன்று பாடல்களைப் போலவே ‘ஸ்ரீ ராமதூத ஸ்தோத்திரம்..’ எனும் இந்தப் பாடலும் இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவரும்.

இந்த படத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

இந்த படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிஸ் உள்ளிட்ட உலக மொழிகளிலும், பான் வேர்ல்ட் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

ஸ்ரீமதி சைதன்யா இத்திரைப்படத்தை வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கலை இயக்க பொறுப்பை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா ஏற்றுக் கொண்டிருக்கிறார்.‌

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்சின் முதல் திரைப்படம் ‘ஹனு-மான்’. இத்திரைப்படம் ‘அஞ்சனாத்ரி’ எனும் கற்பனையான உலகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால் இது உலகம் முழுவதும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் சிறப்பான வரவேற்பை பெறுவதற்கான சாத்தியமுள்ளது.

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!