ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் புத்தம் புதிய நிகழ்ச்சி, ‘மேக்ஸ் மைக்.’
நம் அன்றாட வாழ்க்கையில் பல பாடல்களை பார்த்திருப்போம், அவைகளின் சில பாடல்கள் வெற்றி பாடல்களாக மாறி நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும், சில பாடல்கள் நம் வாழ்க்கைப் பாதையையே மாற்றும் அளவிற்கு உன்னதமானதாக மாறியிருக்கும், சில பாடல்கள் நம் வாழ்க்கை முறையோடு ஓன்றிருக்கும். அப்படியான பாடல்களின் பின்னால் ஒளிந்திருக்கும் பல சுவாரசியமான நிகழ்வுகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. அப்படிப்பட்ட பாடல்களின் பின்னால் இருக்கும் நிகழ்வுகளை பற்றியும் அப்பாடல் பின்னால் இருக்கும் எதார்த்ததையும் மிக சுவாரசியமாகவும், சில்லாகிப்புடனும் பகிர நம்முடன் இணைகிறார் நெறியாளர் ரஃபிக்.