HomeCinemaரியோ ராஜின் ‘ஜோ’ படத்தின் பாடலில் தோன்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா! ரசிகர்கள் மத்தியில்...

ரியோ ராஜின் ‘ஜோ’ படத்தின் பாடலில் தோன்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா! ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் அதிர்வலை…

Published on

ரியோ ராஜ் நடிப்பில் ‘ஜோ’ திரைப்படம் உருவாகிற செய்தி வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக, வண்ணமயமான, நேர்த்தியாக வழங்கப்பட்ட படத்தின் விஷூவல் புரோமோவான ‘உருகி உருகி’ என்ற பாடல் அமைந்தது.

அதையடுத்து ‘ஒரே கனா’ என தொடங்கும் பாடலில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது படத்திற்கு புதிய அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அஜித் நடித்த ’துணிவு’ படத்தில் ‘சில்லா சில்லா’ என்ற சார்ட் பஸ்டர் ஹிட் பாடலை எழுதிய வைசாக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

‘அடிபொலி’ என்ற இண்டி பாடல், ’பேச்சுலர்’ படத்தில் ‘அடியே’ உள்ளிட்ட பெப்பி பாடல்களை கொடுத்த சித்து குமார் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இன்னொரு இசையமைப்பாளர் பாடலில் யுவன் ஷங்கர் ராஜா தோன்றுவது இதுவே முதல்முறை!

‘ஜோ’ படத்தில் ரியோ ராஜ், பவ்யா திரிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னரான இந்தப் படத்தை ஹரிஹரன் ராம்.எஸ் எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸின் டாக்டர். டி.அருளானந்து, மேத்வோ அருளானந்து தயாரித்துள்ளனர்.

‘யுவன் ஷங்கர் ராஜா போன்ற ஒரு மியூசிக்கல் லெஜெண்ட் எங்களது படத்தில் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பையும் மதிப்பையும் உயர்த்தும். அவரது பங்களிப்பு படத்தின் கோல்டன் டச்’ என்று சொல்லி மகிழ்கின்றனர் படக்குழுவினர்.

படம் வரும் நவம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Latest articles

திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க ‘மில்லியன் டாலர் பப்ளிகேஷன்’ தொடக்கம்!

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன் நிறுவனர் யுவராஜ் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- வணக்கம், திரைத்துறையில் புதிய திறமைகளை...

போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி, ‘அப்பா வேணாம்ப்பா’ இயக்குநர் இயக்கிய ‘முதற்கனல்’ மே மாதம் வெளியாகிறது!

ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘முதற்கனல்’. ‘அப்பா ..வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ போன்ற...

விஜய் மில்டனின் ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தின் ட்ரைசரை வெளியிட்ட ஏ.ஆர். முருகதாஸ்!

https://www.youtube.com/watch?v=b-5O5p4oEng தமிழ்–தெலுங்கு இருமொழி படமாக உருவாகும் Gods and Soldiers திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “ட்ரைசர்” (Trailer + Teaser)-ஐ...

ஜி.வி.பிரகாஷின் பதிய படத்தை ‘ஜோ’ பட இயக்குநர் இயக்க நாயகியாகிறார் ஜோ பட நாயகி மாளவிகா மனோஜ்!

ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்கவுள்ள புதிய படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ‘கருடன்’...

More like this