Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaமென்மையான படங்களை மட்டுமே எடுத்துள்ள எனக்கு இந்த கதை சவாலாக இருந்தது! -'இறைவன்' படத்தின் ப்ரீ...

மென்மையான படங்களை மட்டுமே எடுத்துள்ள எனக்கு இந்த கதை சவாலாக இருந்தது! -‘இறைவன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் இயக்குநர் அஹமது பேச்சு

Published on

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில், ஐ. அகமது இயக்கிய ‘இறைவன்’ வரும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி சென்னையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் அகமது, ” ‘மனிதன்’ படத்திற்கு பிறகு ஐந்தாறு வருடங்கள் கழித்து இந்த மேடையில் நிற்கிறேன். ஒரு படம் நடக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளரும் ஹீரோவும் மனது வைக்க வேண்டும். ஜெயம் ரவியுடன் இதற்கு முன்பு ‘ஜனகனமண’ ஆரம்பித்தோம். ஆனால், கோவிட் காரணமாக அது நடக்கவில்லை. ரவியை வைத்து புது ஜானரில் ஒரு படம் எடுக்க நினைத்தேன். அந்த கதையை புரிந்து கொண்ட ரவிக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. அதனால்தான் ‘இறைவன்’ படமே வந்துள்ளது.
இதுவரை நான் சாஃப்ட்டான படங்கள் மட்டுமே எடுத்துள்ளேன். எனக்கே இந்தக் கதை சவாலாகதான் இருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். நயன்தாராவுக்கு இந்தக் கதையை நான்கு நிமிடங்கள்தான் போனில் சொன்னேன். உடனே சம்மதம் சொன்னார். இசையில் யுவன் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளார். ‘இறைவன்’ படத்திற்கு உங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

நடிகர் ஜெயம் ரவி, “இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, ‘இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது.
கோவிட் காரணமாக ‘ஜனகனமண’ நின்றது. அதன் பின்புதான் ‘இறைவன்’ தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான்.

‘பொன்னியின் செல்வன்’ படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் ‘தனி ஒருவன்2’ பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான். ‘இறைவன்’ படம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி, “அகமது சார் மிகவும் தன்மையானவர். அவரிடம் இருந்து இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டைட்டில்கள் அழகாக வைக்கிறார். இறைவன் என்பது நம்பிக்கையான வார்த்தை. ஆனால், அதை இப்படி பயமுறுத்தி ஆர்வத்தோடு கொடுத்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பயமுறுத்தினாலும் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது.
நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். ‘எம். குமரன்’ படத்தில் நதியா மேடம் ஜெயம் ரவிக்கு அறிமுகம் கொடுக்கும் போது நானும் அங்கு நின்றிருப்பேன். அந்த படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். ‘இறைவன்’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

 

 

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!