Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaபள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை வேட்டையாடத் தயாராகும் கதாநாயகன்... ஒரே இரவில் நடக்கும் கதையாக...

பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பலை வேட்டையாடத் தயாராகும் கதாநாயகன்… ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவான ‘இரவினில் ஆட்டம் பார்’ நவம்பர் 8-ல் வெளியாகிறது!

Published on

‘இரவினில் ஆட்டம் பார் ‘என்கிற பெயரில் ஒரு முழு நீள கிரைம் திரில்லர் திரைப்படம் உருவாகியிருக்கிறது.
பள்ளி மாணவிகளுக்கு எதிராகப் பாலியல் குற்றம் செய்பவர்களையும், பள்ளி மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் நாசக்காரக் கும்பலையும் எதிர்த்து ஒரு நிழல் கதாநாயகன் இரவினில் ஆடும் ஆட்டம்தான் கதைக்களம். காமக் கொடூரர்களையும் போதை அடிமைக் கொடியவர்களையும் மர்மமான முறையில் எப்படி அழிக்கிறான் என்பது விறுவிறுப்பான திரைக்கதை.
ஏ. தமிழ்ச்செல்வன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின் கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமாரும், இரண்டாவது கதாநாயகனாக மாரா  ராஜேந்திரனும் நடித்துள்ளனர். சன் டிவி மல்லி, திருமகள் தொடர்களில் நாயகியாக நடித்து வருகிற கிரேசி இந்த படத்தின் கதாநாயகி. தவிர பருத்தி வீரன் சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், அடையாளம் பாண்டு, சி.எம். துரை ஆனந்த் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சேலம் ஏற்காடு பகுதியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஏற்கெனவே படத்தின் பாடல்களும் டிரெய்லரும் வெளியாகி பிரபலமாகி படத்திற்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள ‘கருங்கூந்தல் அழகுக்காரி ‘பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் நவம்பர் 8-ம் தேதி வெளியாகவுள்ளது.
படக்குழு:-
தயாரிப்பு: ஆர் எஸ் வி மூவிஸ் சேலம் ஆர். சேகர்
ஒளிப்பதிவு: ஜினோபாபு
இசை: நல்லதம்பி
பாடல்கள்: செல்வராஜா
சண்டைக் காட்சி: எஸ். ஆர். ஹரிமுருகன்
நடனம்: ஸ்டைல் பாலா
படத்தொகுப்பு: எஸ் ஆர் முத்து கொடாப்பா
மக்கள் தொடர்பு: சக்தி சரவணன்

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!