Thursday, July 18, 2024
spot_img
HomeGeneralதிரைப்படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ், உலகளவில் கிராபிக் டிசைனிங், ஃபேஷன் டிசைனிங்கில் கலக்கும் இமேஜ் குரூப் மாணவர்கள்!

திரைப்படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ், உலகளவில் கிராபிக் டிசைனிங், ஃபேஷன் டிசைனிங்கில் கலக்கும் இமேஜ் குரூப் மாணவர்கள்!

Published on

படைப்பாற்றல் கல்வி வழங்கும் கல்வி நிறுவனமான இமேஜ் குழுமத்தின் கீழ், ICAT டிசைன் மற்றும் ஊடகக் கல்லூரி (www.icat.ac.in), இமேஜ் கிரியேட்டிவ் எஜிகேஷன் (www.image.edu.in) மற்றும் இமேஜ் மைண்ட்ஸ் (www.imageminds) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

நாட்டின் மிகப்பெரிய படைப்பாற்றல் சார்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிறுவனத்தை ஆரம்பித்த கே.குமார், தனது தொலைநோக்கு சிந்தனையால் இமேஜ் குழுவை வழிநடத்திச் செல்கிறார். அவரது புத்திசாலித்தனமான மற்றும் விவேகமான முடிவெடுப்பதன் மூலம், இமேஜ் குரூப் அதன் ஆக்கப்பூர்வமான கல்விகளை வழங்குவதில் இந்தியாவின் ஒரு முன்னோடியாக மட்டுமல்லாமல், தேசத்தின் தலைசிறந்த நபராகவும் வலம் வருகிறார். தனது நிறுவனம் மூலம் நேரடியாக 7,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருப்பவர், 2,500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்புகளை கொடுக்கிறார்.

இந்த நிலையில், ஓவியக் கலையின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் படிக்க கூடிய படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஓவியக் கலையை ஊக்குவிப்பதற்காக ’இமேஜ் ஆர்ட் சேலஞ்ச்’ என்ற போட்டியை இமேஜ் குழுமம் நடத்தியது. படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வளர்க்கும் வளமான பாரம்பரியத்துடன், இமேஜ் குரூப் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வயதினரும் தங்கள் கலைத் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் மீண்டும் சாதனை படைத்துள்ளது.

சப்-ஜூனியர் (வயது 6 முதல் 9 வரை), ஜூனியர் (வயது 10 முதல் 14 வரை), சீனியர் (வயது 15 முதல் 19 வரை), சூப்பர் சீனியர் (வயது 18 முதல் 20 வரை) மற்றும் புரொபஷனல் (வயது 21 மற்றும் அதற்கு மேல்), ஆகிய ஐந்து பிரிவுகளுடன் IAC வழங்கப்பட்டது. அனைத்து வயதினரும் பங்கேற்பாளர்கள் தங்களுக்கு ஏற்ற விதத்தில் தங்களின் கலைத் திறனை வெளிப்படுத்தவும் பெரிய பரிசுகளுக்காக போட்டியிடவும் ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் பரிசு வழங்கும் விழா மே 25 ஆம் தேதி சென்னை, எழும்பூரில் உள்ள அருங்காட்சியகக் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில், ஐந்து பிரிவுகளில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற வெற்றியாளர்களுக்கு ரூ.10 லட்சம் பெறுமானமுள்ள பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மற்ற 100 இறுதிப் போட்டியாளர்களுக்கு ரூ.25 லட்சம் பெறுமானமுள்ள பரிசுத்தொகை சிறப்புப் பரிசுகளாக வழங்கப்பட்டது.

உலகம் முழுவதிலுமிருந்து மற்றும் இந்தியாவிலிருந்தும் நன்கு அறியப்பட்ட கலைஞர்களை உள்ளடக்கிய இமேஜ் குழுமத்தின் மதிப்பிற்குரிய நடுவர் குழு பல மாதங்கள் கவனமாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்களை அருங்காட்சியகம் கலையரங்கில் நடைபெறும் பரிசு வழங்கும் விழாவில் அற்விக்கப்பட்டார்கள்.

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் மாநில அதிகாரி ரூஃபஸ் எச்.கே.ஜார்ஜ் (Rufus H K George) மற்றும் ‘ஆர் ஆர்ட் ஒர்க்ஸ் விஷுவல் ஸ்டுடியோ (R-ART WORKS VISUAL STUDIO)-வின் நிறுவனர் மற்றும் படைப்பு தலைவர் ரமேஷ் ஆச்சார்யா சிறப்பு தலைமை விருந்தினர்களாக கலந்துக்கொண்டு, இமேஜ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.குமாருடன் இணைந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

பத்திரிகையாளர்களிடம் ‘இமேஜ் ஆர்ட் சேலஞ்ச் 2024’ பற்றி கூறிய இமேஜ் குழுமத்தின் நிறுவனர் கே.குமார், “ஓவியக் கலையை சாதாரணமாக பார்க்கிறார்கள். பெற்றோர்களும் சரி, பள்ளிகளும் சரி ஓவிய வகுப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாரத்தில் ஒரு வகுப்பு மட்டுமே நடைபெறுகிறது. அதுவும் முழுமையாக நடைபெறுவதில்லை. ஓவியம் என்பதை ஒரு பொழுதுபோக்காகவும், விளையாட்டுத்தனமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், ஓவியக் கலை தான் பல படிப்புகளுக்கு அடிப்படை தகுதி. கிராபிக்ஸ், ஃபேஷன் டெக்னாலஜி, விஷுவ எபெக்ட்ஸ் உள்ளிட்ட பல துறைகளுக்கு ஓவியக் கலை தான் அடிப்படை மட்டும் அல்ல, பல்வேறு பணிகளுக்கும் ஓவியக் கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஓவியக் கலைக்கு பள்ளிகளும், பெற்றோர்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என்பதற்காகவே நாங்கள் ‘இமேஜ் ஆர்ட் சேலஞ்ச்’ போட்டியை நடத்தினோம்.

எங்கள் நிறுவனம் சார்பில் முதல் முறையாக நடத்தப்பட்ட ‘இமேஜ் ஆர்ட் சேலஞ்ச்’ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை விட, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம், ஓவியக் கலை மற்றும் அதன் தொடர்புள்ள துறைகள் மீது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆர்வம் ஏற்படும் என்று நம்புகிறோம்.

இந்த துறையில் நாங்கள் சுமார் 28 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதால், இதுபோன்ற நிகழ்ச்சியை எங்களால் வெற்றிகரமாக செய்ய முடிந்ததோடு, எங்கள் மாணவர்கள் இந்தியா மட்டும் இன்றி உலகளவில் கிராபிக் டிசைனிங், விஷுவல் எபெக்ட்ஸ், ஃபேஷன் டிசைனிங், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக, தமிழ் சினிமாவில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் மூலம் கவனம் ஈர்த்த, ‘அயலான்’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் எங்கள் மாணவர்கள் பணிபுரிந்தது மகிச்சியளிக்கிறது” என்றார்.

Latest articles

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் தீபாவளியன்று ரிலீஸாகிறது!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' வரும் அக்டோபர் 31; 2024 தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்திய...

More like this

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...