Wednesday, March 11, 2026
spot_img
HomeCinemaகன்னடத் திரையுலகில் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் படத்தில் வாய்ப்பு.

கன்னடத் திரையுலகில் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் படத்தில் வாய்ப்பு.

Published on

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பட பட்டியலில் ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’, ‘வடசென்னை’, தேசிய விருது பெற்ற படமான ‘காக்கா முட்டை’, ‘ஜோமௌண்டே சுவிஷேஷங்கள்’, ‘ டக் ஜகதீஷ்’, ‘வானம் கொட்டட்டும்’ என பல வெற்றி படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.

‘உத்தரகாண்டா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது பிஜப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது. கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி. ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இயக்குநர் ரோஹித் பதகி இயக்கத்தில் உருவாகி வரும் ‘உத்தரகாண்டா’ திரைப்படத்தில் ‘கர்நாடக சக்கரவர்த்தி’ சிவராஜ்குமார், ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்தின் கலை இயக்கத்தை விஸ்வாஸ் காஷ்யப் கவனிக்க, பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார்.

தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட திரையுலகிலும் முத்திரை பதிப்பது உறுதி!

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!