‘கேலோ இந்தியா’ நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க இன்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த, வேல்ஸ் கல்விக் குழும தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ள செய்திக் குறிப்பு இது…
கேலோ இந்தியா நிகழ்ச்சியின் துவக்க விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு அல்லும் பகலும் ஓயாது உழைத்து வரும் பிரதமருடன் கலந்துரையாடியது மறக்க முடியாத தருணமாகும்.
இந்த சந்திப்பின் அடையாளமாக பிரதமருக்கு ’India That is Bharat’ புத்தகத்தை பரிசாக வழங்கினேன். இளம் தலைமுறையினரின் விளையாட்டு மீதான ஆர்வத்தைத் தூண்டும் கேலோ இந்தியா நிகழ்ச்சியின் மூலம் புதிய உயரங்களைத் தொடக் காத்திருக்கும் இளைய தலைமுறைக்கு எனது வாழ்த்துகள்!