Thursday, July 18, 2024
spot_img
HomeCinema‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ஹைதராபாத் அணியின் உரிமையாளரானார்!

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ஹைதராபாத் அணியின் உரிமையாளரானார்!

Published on

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் ( ISPL) – ஒரு ஸ்டேடியத்தின் எல்லைக்குள் அமைக்கப்பட்ட டென்னிஸ் பந்து மூலம் விளையாடப்படும் T10 கிரிக்கெட் போட்டி. இந்த போட்டியில் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெருமைக்குரிய உரிமையாளராகியிருக்கிறார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் மூலம் இந்த போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ஏனைய பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் பட்டியலில் ராம்சரணும் இணைந்திருக்கிறார். இந்த பட்டியலில் அக்ஷய் குமார் (ஸ்ரீநகர்) அணிக்கும், ஹிர்த்திக் ரோஷன் (பெங்களூரு) அணிக்கும், அமிதாப்பச்சன் (மும்பை) அணிக்கும் உரிமையாளராக இடம் பிடித்திருக்கிறார்கள். இதனால் நாடு முழுவதும் இந்த போட்டிக்கான ஆர்வத்தை கூட்டாக உயர்த்தியிருக்கிறது.

ஐ எஸ் பி எல் உடன் ராம்சரண் இணைந்திருப்பது சாதாரணமான பார்ட்னர்ஷிப் அல்ல. இது நிஜாம் நகரத்தில் உள்ள வீரர்களுக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை ஆற்றல் மிக்க வகையில் தூண்டுவதாகும். மேலும் விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்பு மற்றும் ராம் சரணின் நட்சத்திர ஆற்றல் இவை இணைந்து, கிரிக்கெட் விளையாட்டின் மீது அசைக்க முடியாத உற்சாகத்தையும், ஹைதராபாத் அணியின் உரிமையாளரான ராம்சரண்.. இந்த போட்டிக்கு கூடுதல் சக்தியையும் கொண்டு வருகிறார். ஹைதராபாத் மற்றும் அதற்கு அப்பால் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க இயலாத பயணத்திற்கும் அவர் உறுதியளிக்கிறார்.‌ ஐ எஸ் பி எல் இன் துடிப்பான பதாகையின் கீழ் சினிமா மற்றும் கிரிக்கெட் ஒன்றிணைவது… விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தளத்தின் எல்லையை மறு வரையறை செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. இது எல்லைகளைக் கடந்து மில்லியன் கணக்கிலானவர்களின் இதயங்களை கவரும் ஒரு காட்சியையும் உருவாக்குகிறது. ராம் சரணின் உரிமையின் கீழ் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத தயாராகி வரும் ஐ எஸ் பி எல் கிரிக்கெட் போட்டி வழங்கும் இணையற்ற அனுபவத்திற்கு தயாராகுங்கள்.

Players are encouraged to register here: www.ispl-t10.com

ஐ எஸ் பி எல் இன் முதல் சீசன் 2024 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி முதல் முதல் மார்ச் 9 வரை இந்தியாவின் முக்கியமான நகரங்களான மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்) ஆகிய இடங்களில்.. ஆறு அணிகளுக்கு இடையேயான 19 போட்டிகளாக நடைபெறுகிறது.‌

இந்தியன் ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் உடனான தனது தொடர்பு குறித்து ராம் சரண் பேசுகையில், ” ஐ எஸ் பி எல் இன் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது கிரிக்கெட் சார்ந்த பொழுது போக்கை மறுவரையறை செய்வதை உறுதியளிக்கிறது. ஹைதராபாத் எப்போதும் விதிவிலக்கான கிரிக்கெட் திறமையாளர்களின் மையமாக இருந்து வருகிறது. இந்த லீக் போட்டி எங்களுடைய உள்ளூர் வீரர்களுக்கு தேசிய அளவிலான அரங்கத்தில் பிரகாசிக்க ஒரு அருமையான தளத்தை வழங்குகிறது. ஹைதராபாத் அணியை வழிநடத்தவும், நகரத்தின் கிரிக்கெட் திறமையை.. இது போன்ற பெரிய போட்டிகளில் வெளிக்கொணரவும் நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்றார்.

வழக்கமான விதிமுறைகளிலிருந்து விலகி, 19 வயதுக்குட்பட்டவருக்கான குறைந்த பட்சம் ஒரு வீரையாவது விளையாடும் வீரர்களின் பட்டியலில் இணையவேண்டும். இதைத் தவிர, ஐ எஸ் பி எல் – வயது வரம்புகளை விதிக்கவில்லை. இந்த புதுமையான அணுகுமுறை.. ஐஎஸ்பிஎல்..ஐ நாடு முழுவதும் மறைந்திருக்கும் திறமையாளர்களை கண்டறிய ஒரு வளமான மைதானமாகவும் நிலை‌நிறுத்துகிறது.

இந்த போட்டி தொடர்பாக ஐ எஸ் பி எல்லின் கோர் கமிட்டி உறுப்பினர் ஆஷிஷ் ஷெலர் பேசுகையில், ” ஐ எஸ் பி எல் உடன் ராம்சரண் இணைந்தது எங்களுடைய லீக் போட்டிற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கி இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் நட்சத்திர வலிமையின் மீதான அவரது ஆர்வம் சந்தேகத்திற்கு இடமின்றி.. ஹைதராபாத்தில் வளரும் இளம் கிரிக்கெட் வீரர்களை இந்த ஒரு வகையிலான போட்டிக்கு பதிவு செய்ய ஊக்குவிக்கும். வீரர்களிடமிருந்து வெற்றிகரமான ஒத்துழைப்பையும், உற்சாகமான சீஸனையும் எதிர் நோக்குகிறோம்” என்றார்.

இது தொடர்பாக கோர் கமிட்டியின் மற்றொரு உறுப்பினரான அமோல் காலே பேசுகையில், ” ஐ எஸ் பி எல் கிரிக்கெட் லீக் போட்டி மட்டுமல்ல இது திறமை மற்றும் விளையாட்டு திறனின் கொண்டாட்டத்தை கொண்டது. ராம்சரணின் ஈடுபாடு.. இத்தகைய லீக் போட்டியில் நட்சத்திரங்கள் நிறைந்த பட்டியலை மேம்படுத்துகிறது. மேலும் ஒரு புதிய ஆற்றலையும் வழங்குகிறது. ஹைதராபாத் வீரர்களே..! இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த லீக் சீசனை மறக்க முடியாததாக மாற்றுவோம்.” என்றார்.

ஐ எஸ் பி எல் லீக் போட்டிக்கான ஆணையர் சூரஜ் சமத் பேசுகையில், ” ஹைதராபாத் அணியுடன் ராம்சரண் இணைவதன் மூலம் ஒரு உயர்ந்த தரத்திலான போட்டியை எதிர்பார்க்கிறோம். ராம்சரணின் கவர்ச்சியும், அணி மீதுள்ள நம்பிக்கையும், அவர்களை களத்தில் சிறப்பாக செயல்பட தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. கடுமையான மற்றும் விறுவிறுப்பான போட்டியையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஹைதராபாத் அணி.. ராம்சரண் தலைமையில் ஒரு அடையாளத்தை உருவாக்கவுள்ளது.” என்றார்.

ஐ எஸ் பி எல் லீக் போட்டியின் முதல் சீசனுக்கு தயாராகி வரும் நிலையில்… ஆர்வமுள்ள வீரர்கள் ஐ எஸ் பி எல் இன் அதிகராப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, மாநகரத்தில் நடைபெறும் சோதனை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும், தங்களுடைய ‘கோல்டன் டிக்கெட்’டை பெறுவதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மைதானத்திலும் உள்ள சோதனைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இது ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பிரம்மாண்டமான மேடையில் பிரகாசிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த கிரிக்கெட் களியாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை தவற விடாதீர்கள்.!

Players are invited to register for the tournament here: www.ispl-t10.com

Latest articles

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் தீபாவளியன்று ரிலீஸாகிறது!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' வரும் அக்டோபர் 31; 2024 தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்திய...

More like this

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...