ஜீவி பிரகாஷ், காயத்ரி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இடி முழக்கம்.’ சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட தேர்ந்த நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட சீனு ராமசாமி இயக்கிய வெற்றிப் படங்களின் வரிசையில் தனித்துவமான கதைக்கருவை கொண்டுள்ள இந்த படம் ‘பூனே சர்வதேச திரைப்பட விழா’வில் (Pune International Film Festival) திரையிடத் தேர்வாகியுள்ளது.
அந்த உற்சாகத்தோடு படம் பற்றி பேசிய சீனு ராமசாமி, ‘‘பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இடி முழக்கம் தேர்வானதில் எனக்கும், படக் குழுவினருக்கும் பெரும் மகிழ்ச்சி. இது ஒரு சமுதாயத்தின் மகிழ்ச்சியும் கூட. விழாவிற்காக தகுதி பெற்ற திரைப்படம் உங்கள் மனதிலும் இடம்பெறுவதற்கான தகுதியையும் பெரும் என்பதில் சந்தேகமில்லை. என்னுடைய எல்லா திரைப்படத்திற்கும் தருகின்ற ஆதரவை போல இத்திரைப்படத்திற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
‘ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ கலைமகன் முபாரக் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.