Thursday, July 18, 2024
spot_img
HomeCinemaராஜு முருகனின் உதவி இயக்குநர் இயக்கும் ‘பராரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ்...

ராஜு முருகனின் உதவி இயக்குநர் இயக்கும் ‘பராரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

Published on

இயக்குநர் ராஜு முருகன் ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’, ‘ஜப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய எழில் பெரியவேடி இயக்கியுள்ள படம் ‘பராரி.’

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அதற்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் ‘தோழர் வெங்கடேசன்’ படப்புகழ் ஹரிசங்கர் கதாநாயகனாகவும், புதுமுகம் சங்கீதா கல்யாண் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட ஆறுமாத காலம் நடிப்புப் பயிற்சி பெற்ற புதுமுகங்கள் பலரும் படத்தில் நடித்துள்ளனர். படத்தில் நடித்துள்ள புதுமுகங்களில் பெரும்பாலான நடிகர்கள் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைத் துறை, டெல்லி நேஷனல் ஸ்கூல் டிராமா, பெங்களூரு நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா ஆகியவற்றில் முறையான நடிப்பு கல்விப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். அவர்களில் சிலர் பிஎச்.டியும் படித்துள்ளனர்.

திருவண்ணாமலையை சுற்றியிருக்கும் பகுதியிலுள்ள எளிய மக்களின் வாழ்க்கை முறையையும் அவர்களுக்கான அரசியலையும், சாதி, மொழி, மதத்தை வைத்து சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சமகால அவலங்களையும் இந்தப் படம் பேசுகிறது.

சாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்யும் இந்த மானுட சமூகத்தை அறத்தோடு கேள்வி கேட்கும் விதமாக இந்தப் படம் இருக்கும். ‘பராரி’ எண்ற சொல் தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்கிறார்கள் படக்குழுவினர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், பெங்களூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 45 நாட்களுக்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இயக்குநர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை வழங்குகிறார்.

பல நேர்த்தியான மெல்லிசைகளை உருவாக்கிய ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, என் ஜி கே, ‘தங்கலான்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் கருத்தாழமிக்க பாடல்களை எழுதிய உமா தேவி பாடல்களை எழுதியுள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படக்குழு:
எடிட்டர்: சாம் ஆர்டிஎக்ஸ்
கலை: ஏ.ஆர். சுகுமாரன் பிஎஃப்ஏ
ஒலி வடிவமைப்பு: எஸ்.அழகிய கூத்தன், சுரேன்.ஜி
ஒலி கலவை: சுரேன்.ஜி
ஸ்டண்ட்: ஃபயர் கார்த்தி
நடன அமைப்பு: அபிநயா கார்த்திக்
மேக்கப்: ஜி. முத்துக்கனி
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்

Latest articles

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் தீபாவளியன்று ரிலீஸாகிறது!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' வரும் அக்டோபர் 31; 2024 தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்திய...

More like this