Wednesday, March 11, 2026
spot_img
HomeCinemaபவர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி 1’ படத்தின் படப்பிடிப்பு...

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ‘ஹரி ஹர வீர மல்லு பகுதி 1’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியது!

Published on

பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ’ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ மூலம் சரித்திரம் படைக்க உள்ளார். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படம் முன்னெப்போதும் இல்லாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவதை உறுதியளிக்கிறது. பீரியட் ஆக்‌ஷன் படத்தில் பவன் கல்யாணின் புதிய அவதாரத்தை காண ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஜோதி கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் 17ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்‌ஷன்- அட்வென்ச்சர் படமாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஊழல் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடும் புகழ்பெற்ற ஹரி ஹர வீர மல்லுவின் கதைதான் இது. சார்மினார், செங்கோட்டை மற்றும் மச்சிலிப்பட்டினம் துறைமுகம் போன்றவற்றை பிரமாண்டமான பட்ஜெட்டில் செட் உருவாக்கியுள்ளனர். சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட இவை அனைத்தும் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

புகழ்பெற்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் டிரைக்டர் நிக் பாவெலின் இயக்கத்தின் கீழ் 400-500 ஸ்டண்ட்மேன்கள் மற்றும் கூடுதல் கலைஞர்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர் பவன் கல்யாண் ரிஸ்க் எடுத்து செய்த ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் பாராட்டு பெறும். படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் விஜயவாடாவில் கடைசி ஷெட்யூல் நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டத்தில் பவன் கல்யாண் மற்றும் 200 கலைஞர்கள் பங்கேற்கும் மற்றொரு பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சி இதில் இடம்பெறும். அதன் பிறகு படப்பிடிப்பு முடிவடையும்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் மார்ச் 28, 2025ல் வெளியாகவுள்ளது.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!