Tuesday, November 5, 2024
spot_img
HomeCinemaபடத்திற்கு 'ஹபீபி'என டைட்டில் வைத்த காரணம் என்ன? -சொல்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்

படத்திற்கு ‘ஹபீபி’என டைட்டில் வைத்த காரணம் என்ன? -சொல்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்

Published on

இயக்குநர் மீரா கதிரவன் அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்தவர். இப்போது அவர் இயக்கும் படம் ‘ஹபீபி.’

அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் ‘என் அன்பே’ என்று அர்த்தம். இதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவனிடம் பேசியபோது, “இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அது 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியமாகியிருக்கிறது. நமது ஆரவாரமான பேச்சுக்களை ஓதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது. மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது.

இந்த படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல் கதை ஒன்றும் பின்னப்பட்டுள்ளது.

இந்த படத்தை காணும் அனைவரும் தங்கள் வாழ்கையோடு தொடர்புபடுத்தி பார்த்து தங்களையே பார்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அந்தவகையில் சர்வதேச அளவில் வியாபார ரீதியாகவும் இந்த படம் சென்று சேரும் என்பதால் இந்த படத்திற்கு ஹபீபி என டைட்டில் வைத்துள்ளோம்

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரிராஜா இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இது என்றே சொல்லலாம். அவரது திரையுலக பயணத்திலும் இது ஒரு முக்கிய படமாக இருக்கும். இந்த படத்திற்காக கஸ்தூரிராஜாவை அணுகியபோது நான் முதலில் திரைக்கதையை படித்துப் பார்க்கிறேன் என்று கூறினார். இந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதுடன் இதில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அறிமுக நாயகன் ஈஷா நடிக்க ஜோ என்கிற படத்தின் மூலம் இளைஞர்களிடேயே பெரிதும் கொண்டாடப்பட்ட மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை மாநாடு, வணங்கான் படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பார்த்துவிட்டு அவரே விருப்பப்பட்டு தனது வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் வெளியிட இருக்கிறார்” என்றார்.

படக்குழு:-
இயக்கம்: மீரா கதிரவன்
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசுவாமி
படத்தொகுப்பு: ராஜா முகமது
கலை: அப்புன்னி சாஜன்
மக்கள் தொடர்பு: ஏ ஜான்

Latest articles

ராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் படத்தில் ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ சாய் அபயங்கர்!

இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது...

இது மாஸ் ஆக்சன் படம்போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த உணர்வு ஏற்படும்! -‘தி டார்க் ஹெவன்’ பட நிகழ்வில் நடிகர் நகுல் பேச்சு

நகுல் போலீஸாக நடித்திருக்கும் 'தி டார்க் ஹெவன்' படத்தை 'டி3' பட இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ளார். படம் விரைவில்...

சர்வதேச அளவில் 108 விருதுகளை வென்ற ஆவணப்படம் ‘கழிப்பறை’ முழு நீள திரைப்படமாகிறது.

சர்வதேச அளவில் 108 விருதுகளை வென்று, பலரது கவனத்தையும் ஈர்த்த 'கழிப்பறை' என்ற ஆவணப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி...

மாதவன், மடோனா செபாஸ்டியன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி விரைவில் ரிலீஸ்!

மாதவன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதோடு, இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தற்போது 'அதிர்ஷ்டசாலி' என்ற படத்தில்...

More like this