Tuesday, October 8, 2024
spot_img
HomeCinemaதிரிசூலம் ஏந்தியபடி விஸ்வம்பரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடி காட்டும் சிரஞ்சீவி!

திரிசூலம் ஏந்தியபடி விஸ்வம்பரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடி காட்டும் சிரஞ்சீவி!

Published on

மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ ஃபேண்டஸி என்டர்டெய்னரான விஸ்வம்பரா’ படக்குழு ரசிகர்களுக்கு விருந்தளிக்க அதிரடியான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

ப்ரீ லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில் இப்போது வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை சுற்றிலும் பாய்கிறது.

சிரஞ்சீவி மிக இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் லேசான தாடியுடன் தோற்றமளிக்கிறார், திரிசூலத்தினை கையில் பிடித்தபடி, மிரட்டலான லுக்கில் அசத்துகிறார். இந்த கண்கவர் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிளாக்பஸ்டர் பிம்பிசாரா திரைப்படத்தை வழங்கிய இயக்குநர் வசிஷ்டா, தனது அபிமான நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து இந்த படத்தை பிரமாண்ட படைப்பாக உருவாக்குகிறார். சிறந்த விஎஃப்எக்ஸ், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் ரசிகர்கள் ஆச்சர்யம் கொள்ளும் வகையில், ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார்.

நடிகை திரிஷா, ஆஷிகா ரங்கநாத் கதாநாயகிகளாக நடிக்க குணால் கபூர் சக்திவாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார்.

விக்ரம், வம்சி, பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில், இந்த ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார், பிரபல லென்ஸ்மேன் சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் அடுத்த வருடம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

படக் குழு:-
எழுத்து இயக்கம்: வசிஷ்டா
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Latest articles

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ‘வாழை’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 11-லிருந்து ஸ்டிரீமாகிறது!

மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான 'வாழை' திரைப்படத்தை வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து...

இந்த படம் இளைஞர்களை கவர்வதோடு அவர்களின் மூளைக்கும் வேலை கொடுக்கும்! -பிளாக் பட பிரஸ் மீட்டில் நடிகர் ஜீவா பேச்சு 

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள பிளாக் படம் வரும் அக்டோபர் 11-ம்...

நடிகர் கே சி பிரபாத்துக்கு யாமம் படப்பிடிப்பில் ஹார்ட் அட்டாக்! சிம்ஸில் தொடரும் சிகிச்சை.

கே சி பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த் திரையுலகில்  தயாரிப்பாளராக கால்பதித்தார். அந்த படத்தில் நடிகராக...

தமிழ்நாடு முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற, சென்னை டிடிகே சாலை துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழா!

சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான...

More like this