HomeCinema'ஹேய் அர்ஜுன்' சிறப்புத் திரையிடலில் பங்கேற்ற இயக்குநர் லிங்குசாமி, கூல் சுரேஷ்... பாராட்டுக்களால் உற்சாகமான படக்குழு!

‘ஹேய் அர்ஜுன்’ சிறப்புத் திரையிடலில் பங்கேற்ற இயக்குநர் லிங்குசாமி, கூல் சுரேஷ்… பாராட்டுக்களால் உற்சாகமான படக்குழு!

Published on

THE CHOSEN ONE PTE LTD [சிங்கப்பூர்] நிறுவனம் தயாரிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் கதையாக, 45 நிமிடங்கள் வரை ஓடுகிற ‘ஹேய் அர்ஜுன்‘ படத்தை முகமது ஜார்ஜிஸ் இயக்கியுள்ளார். டெல்லி கணேஷ் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடிக்க, புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. இயக்குநர் லிங்குசாமி, நடிகர் கூல் சுரேஷ் கலந்து கொண்டு படத்தை பார்த்து படக்குகுழுவை வாழ்த்தி, பாராட்டினர்.

நிகழ்வில் லிங்குசாமி பேசும்போது, “ஹேய் அர்ஜுன் ஒரு புது டீம், என்ன பண்ணிருப்பாங்களோனு தான் வந்தேன். ஆனா நல்லா பண்ணிருக்காங்க. அந்த மாயாஜாலக் கல் வந்த உடனே மின்னல் முரளி போல ஒரு ஆக்ஷன் எல்லாம் வருமோனு நினைச்சேன். ஆனா அதை காதல் படமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் ஜார்ஜிஸ். இதை ஒரு முழுநீள படமாகவும் எடுக்கலாம். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உழைப்பை போட்டால் இந்த குழுவிடம் இருந்து மிகச் சிறந்த படங்களை தர முடியும்” என்றார்.

கூல் சுரேஷ் பேசும்போது, “இந்த சின்ன குழுவை மதித்து எந்த ஈகோவும் பார்க்காமல் வாழ்த்த வந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அவரின் இந்த குணத்தால் தான் அவர் எப்போதும் பெரிய மனிதராகவே இருக்கிறார்.

இந்த படத்தின் ஹீரோ கெளதம் காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் எப்படி இருப்பாரோ அந்த மாதிரியே இருக்கிறார். நகுல் மாதிரி உருகி உருகி காதலிக்கிறார். நாயகி பூஜா நிறைய அழுறாங்க, அதுவும் ஒரு அழகு தானே. இயக்குநர் ஜார்ஜிஸ் தமன் மாதிரியே இருக்கிறார். நான் ஒரு விழாவில் ஒரு பெண்ணுக்கு மாலை அணிவித்தது மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. இனிமே அது நடக்காது. இந்த நாயகியின் நடிப்பை பாராட்டி நான் சால்வை அணிவிக்கிறேன்” என்றார்.

Latest articles

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

‘கான் சிட்டி’ படத்திலிருந்து ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் நான் தான் கிங்கு’ லிரிக்கல் வீடியோ!

https://www.youtube.com/watch?v=RMEyZXDQrCg பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி...

More like this