Friday, March 28, 2025
spot_img
HomeCinemaகாதல்தான் இந்த பாடலின் கரு! -'ஹாஃப் பாட்டில்' ஆல்பம் பாடல் அறிமுகவிழாவில் இயக்குநர், நடிகர் எழில்வாணன்...

காதல்தான் இந்த பாடலின் கரு! -‘ஹாஃப் பாட்டில்’ ஆல்பம் பாடல் அறிமுகவிழாவில் இயக்குநர், நடிகர் எழில்வாணன் உற்சாகம்

Published on

ஹாஃப் பாட்டில்.’ இது இன்றைய இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு, தீபன் மற்றும் வைபவ் இசையில், எழில்வாணன் இ வி வடிவமைத்து உருவாக்கியிருக்கும் ஆல்பம் பாடலின் தலைப்பு.

எழில்வாணன், பிக்பாஸ் ரவீனா இணைந்து நடித்துள்ள இந்த பாடல் இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பாடலின் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில், எழில்வாணன் பேசியபோது, ”பிரபலங்களை அழைக்காமல் பத்திரிகையாளர்களையே பிரபலங்களாக நினைத்து, பாடலை அறிமுகப்படுத்துகிறோம். நான் அமெரிக்காவில் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறேன், இந்த துறை மீதான காதலில் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன், யார் வேண்டுமானாலும் எந்த துறையில் வேண்டுமானாலும் அவர்கள் விரும்பினால் சாதிக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தான் இதைச் செய்கிறேன். என் படக் குழுவினர் எனக்கு மிக உறுதுணையாக இருந்தார்கள். தீபக் மற்றும் வைபவ் இருவரும் எனக்கு இரண்டாவது முறையாக இசையமைக்கிறார்கள். எடிட்டர் கலைவாணனும் நானும் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறோம். அவர் எனக்கு ஒரு மேஜிக் எடிட்டிங் செய்து கொடுப்பார் அது அவ்வளவு அழகாக இருக்கும் அவருக்கும் எனது நன்றி.

இரண்டு வருடங்கள் முன்பே இதற்கான நடன அமைப்பை உருவாக்கி விட்டேன், இந்த பாடலுக்கு ரவீனா சரியாக இருப்பார் என்று அவரை அணுகினேன் அவர் உடனடியாக பண்ணலாம் என ஒத்துக் கொண்டு செய்தார். இந்த பாடலின் கரு காதல் தான், காதலர்களுக்கு இடையில் பிரச்சனைகள் வரும்போது மனம் விட்டுப் பேசினால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்துவிடலாம். அதைத்தான் ஒரு கருவாக வைத்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் இந்த பாடல் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பாடலுக்கு ஆதரவு தாருங்கள்.

இந்த மேடைக்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முருகன் அண்ணா, சுரேந்தர் அண்ணா, விஜய் அண்ணா இந்த மூவரும் தான் காரணம், எல்லா இடத்திலும் இவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். எந்த ஒரு காரியம் என்றாலும் உன்னால் முடியும் செய் எனத் தைரியம் தந்திருக்கிறார்கள்” என்றார்.

நடிகை ரவீனா பேசியபோது, எங்களை ஆதரிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஆல்பம் பாடலின் ஷூட்டிங் வெறும் சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டது. அத்தனை திட்டமிடலுடன் நடந்து முடிந்தது. ஷூட் ரொம்ப ஜாலியாக நடந்தது. எப்போதும் உடன் நடிக்கும் நடிகர்கள் கலைஞர்கள் நம்மை காம்போர்ட்டபிளாக வைத்துக் கொண்டால் நாம் சிறப்பாக வேலை செய்வோம், அந்த வகையில் இந்த படக்குழுவினர் என்னை மிகச்சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர்.

எழில்வாணன் மிகத் திறமைசாலி இந்த பாடலின் முழு வேலைகளையும் அவரே செய்துவிட்டார் இந்த துறையின் மீதான காதலில் அவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து, இதைச் செய்து வருகிறார். சினிமாத்துறை மீது காதலுடன் இருப்பவர்கள் உருவாக்கியிருக்கும் படைப்பில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த டீமில் வேலை என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்பாடல் மிகச்சிறப்பாக வந்துள்ளது. விரைவில் இணையத்தில் வெளியாகும்..உங்கள் ஆதரவைத் தாருங்கள்’ என்றார்.

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this