Thursday, January 23, 2025
spot_img
HomeCinemaகலையரசன், கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கும் 'ஹாட் ஸ்பாட்'...

கலையரசன், கௌரி கிஷன், அம்மு அபிராமி, ஜனனி நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கும் ‘ஹாட் ஸ்பாட்’ மார்ச் மாதம் ரிலீஸ்!

Published on

‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய வித்தியாசமான வெற்றிப் படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அடுத்த படம் ‘ஹாட் ஸ்பாட்.’

இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக ஆட்டோ ஓட்டுநராக  மாறுபட்ட நடிப்பைக் கொடுத்திருக்கிறார். திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ் சோபியா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ’96’, ‘அடியே’ படங்களின் நாயகி கௌரி கிஷன் இளம் மனைவியாக, ஆண்கள் மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்தும்படியான பாத்திரத்தில் வருகிறார்.

சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் என பலரும் நடித்துள்ளனர். படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது.

‘கே ஜே பி டாக்கீஸ்’ மற்றும் 7 ‘வாரியார் பிலிம்ஸ்’ பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்கள். படத்தை ‘சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட்’ சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் வெளியீடுகிறார்.

படம் பற்றி இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிடம் கேட்டபோது, ”சமுதாயத்தில் அன்றாடம் நம் கண் முன்பே நடக்கும் சில அடிப்படை விஷயங்களை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் கடந்து செல்கிறோம். ஆனால், அது சமுதாயத்தில்  பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும் போதுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்று நாம் யோசிப்போம். அப்படிப்பட்ட  முக்கிய விஷயங்களை அலசும் கதையாக இந்த படம் இருக்கும். திரைக்கு வந்த பிறகு சமுதாயத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தும். ஏனென்றால் இது மக்களை மற்றும் மக்களை சுற்றி நடக்கும் அரசியலை குறித்து விவாதிக்கும் கதை. இளைஞர்கள் முதியவர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினர் மனங்களில் விழிப்புணர்வையும், தட்டி கேட்க வேண்டும் என்ற துணிச்சலையும் தரும்.

படப்பிடிப்பு முழுவதும்  சென்னையில் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுவே இப்படம் சமுதாயத்தில் என்ன விஷயத்தை பேசப் போகிறது என்ற ஆர்வத்தையும் அதிகரித்து இருக்கிறது” என்றார்.

Latest articles

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...

’குடும்பஸ்தன்’ உங்களை சிரிக்க வைத்து,மனஅழுத்தத்தைக் குறைக்கும்! -இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உருவாகியுள்ளது. இந்தப் படம்...

More like this