விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில், அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
இந்த நிலையில் விஜய் ஸ்ரீ ஜி தான் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பை காதலர் தினமான இன்று வெளியிட்டார். ‘காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது’ என தலைப்பிடப்பட்டுள்ள அந்த புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் பூஜையுடன் தொடங்குகிறது.
படப்பிடிப்பை சென்னை, கோவை, கோவா, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடத்தவும், படத்தை தீபாவளியின்போது வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.