Tuesday, April 22, 2025
spot_img
HomeCinema‘ஹரோம் ஹரா' படத்தின் டீசரை நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரபாஸ், மம்மூட்டி, டைகர் ஷெராஃப், கிச்சா...

‘ஹரோம் ஹரா’ படத்தின் டீசரை நடிகர்கள் விஜய் சேதுபதி, பிரபாஸ், மம்மூட்டி, டைகர் ஷெராஃப், கிச்சா சுதீப் வெளியிட்டு வாழ்த்து!

Published on

சுதீர் பாபுஸ்ரீ கதாநாயகனாக நடிக்க, சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ் சார்பில் எஸ்.எஸ்.சி. தயாரித்திருக்கும் படம் ஹரோம் ஹரா. படத்தில் மாள்விகா ஷர்மா, சுனில், ஜெ.பி. அக்ஷரா கௌடா, லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் அர்ஜூன் கௌடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஞானசேகர் துவாராக இயக்கும் இந்த படத்தின் டீசரை பிரபாஸ், மம்மூட்டி, டைகர் ஷெராஃப், விஜய் சேதுபதி மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் தெலுங்கு, மலையாளம், இந்தி, தமிழ், கன்னட மொழிகளில் வெளியிட்டனர்.

டீசர் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், மாஸ் சம்பவங்களும் இடம்பெற்று உள்ளன. 1980 காலக்கட்டத்தில் நடைபெறுவது போன்ற கதையம்சம் கொண்ட ஹரோம் ஹரா படத்தை இயக்குனர் ஞானசேகர் துவாரகா ஒவ்வொரு காட்சியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் படி கதையை தேர்வு செய்திருக்கிறார். இவற்றுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில், வசனங்களும் பட்டையை கிளப்பும் வகையில் உள்ளன.

பல எதிரிகள் தனது வீழ்ச்சிக்காக காத்திருக்கும் சூழலில், சாதாரண மனிதனாக இருந்து, நகரின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக உருவெடுக்கும் வகையில் சுப்ரமணியம் என்ற கதாபாத்திரத்தில் சுதீர் பாபு நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மாள்விகா ஷர்மா நடித்துள்ளார். மேலும் லக்கி லக்ஷமன், ரவி கலே மற்றும் அர்ஜூன் கௌடா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தையும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் பிரமாண்டமாக படமாக்கி இருக்கிறார். இவருடன் ஒவ்வொரு காட்சியிலும் வலுப்படுத்தும் வகையில், சைத்தன் பரத்வாஜ் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார். தயாரிப்பு மேற்பார்வையிலும் சிறப்பான பணி மேற்கொள்ளப்பட்டு இருப்பது டீசரில் அம்பலமாகி இருக்கிறது.

ஹரோம் ஹரா படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் படம் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது.

படக்குழு:

எழுத்து, இயக்கம் – ஞானசேகர் துவாரகா
தயாரிப்பாளர் – சுமந்த் ஜி நாயுடு
இசை – சைத்தன் பரத்வாஜ்
ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்
படத்தொகுப்பு – ரவிதேஜா கிரிஜலா
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ சுப்ரமண்யேஷ்வரா சினிமாஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார்.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!