Tuesday, September 10, 2024
spot_img
HomeMovie Review'கிளாஸ்மேட்ஸ்' சினிமா விமர்சனம்

‘கிளாஸ்மேட்ஸ்’ சினிமா விமர்சனம்

Published on

‘சரக்குப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் சமூகத்தின் நிம்மதியைக் கெடுக்கும் சதிகாரர்கள்’ என்ற கருத்தை விதைக்கும் படம்.

ஹீரோ அங்கையற்கண்ணன் ஆல்கஹாலுக்கு அடிமையானவர். அவருடைய மாமன்காரரும் அதே ரகம். இருவரும் இணைபிரியாமல் எந்த நேரமும் குவார்ட்டர், ஆஃப், ஃபுல் என ஏற்றிக்கொண்டு திரிவதால் சின்னச் சின்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பெரியளவிலான சிக்கல் அவர்களைச் சூழ்கிறது.

அது என்ன மாதிரியான சிக்கல்? அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா? குடிப்பழக்கத்துக்கு குட் பை சொல்ல முடிந்ததா? இப்படியான கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில்கள் இருக்கிறது… இயக்கம் ‘குட்டிப்புலி’ சரவண சக்தி

நாயகன் அங்கையற்கண்ணனும், இயக்குநர் சரவண சக்தியும் குடிக்கு அடிமையானவர்கள் செய்கிற அத்தனை அடாவடிகளையும் அட்டகாசமாக செய்திருக்கிறார்கள். சரவண சக்தியின் அலம்பல் சலம்பல் கொஞ்சம் கொஞ்சம் கலகலப்பூட்டுகிறது.

ஹீரோவுக்கு ஜோடியாக வருகிற பிரணா அழகாக இளமையாக இருக்கிறார். சரவண சக்திக்கு ஜோடியாக வருபவர் தேகத்தின் செழுமையில் கவர்ச்சியாகத் தெரிகிறார்.

இருவரும் அவரவர் கணவன்மார்களின் குடிபழக்கத்தை பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடன் செல்லம் கொஞ்சி பொழுதைக் கழிக்கிறார்கள்.

மயில்சாமி வழக்கம்போல் குடிகாரராக வந்துபோக, நிறைவுக் காட்சியில் அயலி அபி நக்ஷ்த்ரா கதையின் திருப்புமுனையாக நின்று கவனம் ஈர்க்கிறார்.

குடிகாரர்களுக்கு சிகிச்சையளிக்க களமிறங்கி அவர்களைவிட பெரிய குடிகாரராக மாறுகிற கார்த்திக், துபாய் ரிட்டர்ன் பேர்வழியாக கிராமத்து வாய்க்கால் வரப்பில் கோட் சூட்டுடன் திரிகிற சாம்ஸ் இருவரின் ரகளை கொஞ்சமாய் ரசிக்க வைக்கிறது.

அருள் தாஸ், மீனாள் என மற்றவர்கள் நடிப்பில் குறை வைக்கவில்லை.

பிரித்வி இசையில் ‘வாடா மச்சி கட தொறந்தாச்சு’, ‘அடிக்கிற பொண்டாட்டி தெருவுல நிப்பாட்டி’ ஆகிய உற்சாகமான பாடல்களுக்கு, நாயகன் தன் மாமனுடன் குடித்துவிட்டுப் போடும் ஆட்டம் கூடுதல் உற்சாகம் தந்திருக்கிறது.

ஒளிப்பதிவு உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு கச்சிதம்.

கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் குடி நோயாளிகள் என்பதை படம் பார்ப்பவர்களுக்கு முதல் சில காட்சிகளிலேயே உணர வைத்த பின்பும், படம் நெடுக அவர்களை குடிக்க வைத்திருப்பது சலிப்பு.

குடிப்பழக்கத்தின் தீமைகளை எடுத்துச் சொல்ல நினைத்தது நல்ல விஷயம்தான். மறுப்பதற்கில்லை. அதற்கேற்ப கதையில் கனமில்லாததால் பெரிதாய் பாராட்ட வழியில்லை.

பெட்டர் ‘பெக்’ நெக்ஸ்ட் டைம்…

Latest articles

முக்கிய கதாபாத்திரத்தில் நாய்; ரஜினி ரசிகராக கதாநாயகன்; சென்டிமென்ட் கலந்த திரில்லராக ‘தில்ராஜா.’

விஜய் சத்யா ரஜினி ரசிகராக நடிக்கும் ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த திரில்லர் திரைப்படம் 'தில்ராஜா.' சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார்,...

தங்கலானை கொண்டாடும் வட இந்திய மாநிலங்கள்… மகிழ்ச்சியில் படக்குழு.

சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க,  பா.இரஞ்சித் இயக்கியுள்ள 'தங்கலான்' தமிழ்,தெலுங்கு, மலையாளம்...

நடுக்கடலில் சவாலான ஷூட்டிங்… கொண்டல் படம் பற்றி சொல்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல்

ஷபீர் கல்லரக்கல் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு துல்கர்...

தலைப்பிலும், அறிவிப்புகளிலும் அழகுத்தமிழ்… மெய்யழகன் படக்குழுவை பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான்

அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி, இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும்...

More like this