Thursday, March 27, 2025
spot_img
HomeCinemaஸ்வாக், ஸ்டைல், மாஸ்... ராம்சரணின் அதிரடி நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் லக்னோவில்...

ஸ்வாக், ஸ்டைல், மாஸ்… ராம்சரணின் அதிரடி நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் லக்னோவில் வெளியீடு!

Published on

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது!

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் கடந்த நவம்பர் 9, 2024 அன்று பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.

டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி  என்டர்டெய்னரில் கலக்குகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான  ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில்  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது !  இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த அதிகாரி (ஐஏஎஸ் அதிகாரி) மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார்.

ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர்,  படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் முத்திரை, ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. கண்கவர் ஃப்ரேம்கள் , அதிரடி ஆக்சன், மனம் மயக்கும் இசை என டீசர் படம் முழுமையான  என்டர்டெய்னராக இருக்குமென்பதை உறுதி செய்கிறது. இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை, இதுவரை இல்லாத அளவில் வெகு ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தியுள்ளார்.

ஒருபுறம் படம் அதிரடி ஆக்‌ஷன் திரில்லராகத் தோன்றினாலும், மறுபுறம், இது பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த சினிமா அனுபவமாக இருக்கும் என்பதை டீசர் உறுதியளிக்கிறது.  எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது,  அதே வேளையில் எஸ்.தமனின் அட்டகாச இசை உணர்வுப்பூர்வமான நம்மைத் தாக்குகிறது. நடிகை கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, நவீன் சந்திரா, சுனில் மற்றும் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பில், ‘கேம் சேஞ்சர்’ ஒரு அசத்தலான என்டர்டெய்னராக இருக்கும்.

டீசர் பிரமிக்க வைக்கும் காட்சிகள், அழுத்தமான கதைக்களம் மற்றும் ராம் சரணின் ஸ்டைலான தோற்றம் எனப் பார்வையாளர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. “ஐ ம் அன் பிரடிக்டபிள்” ( நான் யூகிக்க முடியாதவன் )  என டீசரில் ராம் சரண் சொல்லும் பஞ்ச் டயலாக்  மேலும் ஆவலைத் தூண்டுகிறது. டீசர் வெளியான வேகத்தில் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில்,  தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம்,   ஜனவரி 10, 2025 அன்று, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.  கேம் சேஞ்சர் ராம் சரணின் திரை வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது, மேலும் ஏஏ பிலிம்ஸ் வட இந்திய விநியோக உரிமையைச் சாதனை விலைக்கு வாங்கிய பிறகு, படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

Latest articles

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...