Monday, March 24, 2025
spot_img
HomeCinemaஉணர்ச்சிகரமான கதை, அட்டகாசமான சினிமா அனுபவம்... தெலுங்கு பிளாக்பஸ்டர் 'காமி' ஏப்ரல் 12 முதல் ZEE5...

உணர்ச்சிகரமான கதை, அட்டகாசமான சினிமா அனுபவம்… தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘காமி’ ஏப்ரல் 12 முதல் ZEE5 தளத்தில்!

Published on

தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘காமி’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, இந்த தெலுங்குப் படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 இல் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது.

கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள “காமி” திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதாவின் தெலுங்கு படமான ‘காமி’ ஒரு உணர்ச்சிகரமான கதையையும், ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தையும் ஒருங்கே தரும் படைப்பாக அமைந்துள்ளது. விஷ்வக் சென் மற்றும் சாந்தினி சௌத்ரியின் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களின் வழியே, மனித மனத்தின் விசித்திரங்களைப் பேசுவதுடன், ஆத்மாவின் தேடலை ஆராய்வதோடு, வாழ்வின் காலக்கடிகரமாக, விந்தை காட்டும் படைப்பாக உருவாகியுள்ளது. இயற்கையை மாற்ற முயலும் மனிதகுலத்தின் முயற்சி, பேரழிவு விளைவுகளை உருவாக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

காமி, ஷங்கரின் (விஷ்வக் சென்) பயணத்தை விவரிக்கிறது, மனித ஸ்பரிசத்தை உணர முடியாத ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு அகோரி தான் ஷங்கர். துரோணகிரி மலையில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மர்மமான காளானான மாலிபத்ராவைத் தேடி அவர் செல்கிறார். வழியில், ஷங்கர் இதேபோன்று அந்த காளானைத் தேடும் நுண்ணுயிரியலாளர் ஜானவியை (சாந்தினி சௌத்ரி) சந்திக்கிறார். அவர்களின் விதி, இமயமலையின் பனிக்குளிரில் அவர்களை அலைக்கழிக்கிறது. இன்னொரு புறம் இந்தக்கதை இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக அறியப்பட்ட தேவதாசி பாரம்பரியத்தின் பாதகங்களைப் பேசுகிறது. ஷங்கர், ஜானவி பயணம் வெற்றி பெறுமா ? ஏப்ரல் 12 ஆம் தேதி ZEE5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நடிகர் விஷ்வக் சென் பேசுகையில், “காமி படத்தில் ஷங்கரின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது அசாத்தியமான பயணமாக இருந்தது. வித்யாதரின் சிறப்பான இயக்கத்தில் எங்கள் குழுவினர் அயராது உழைத்து, ஒரு தலைசிறந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் நீண்ட நாட்களாக பெரும் உழைப்பில் உருவாகி வந்தது. அதற்குப் பலனாக, இப்படம் தியேட்டரில் பார்வையாளர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. பார்வையாளர்களின் அன்பு ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம் தொடரும் என்று நம்புகிறேன். நாங்கள் உருவாக்கிய மேஜிக்கை ZEE5 இன் பார்வையாளர்கள் காண ஆவலாகக் காத்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் வித்யாதர் கூறுகையில், “காமி படத்தை உருவாக்குவது பல சவால்கள் நிறைந்த பயணமாக இருந்தது, ஆனால் இப்படத்திற்குப் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்கள் எங்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இப்படத்திற்காக நாங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் கடின உழைப்பைத் தந்துள்ளோம், இப்போது ZEE5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம், திரைப்படங்கள் மீதான எங்களின் காதல் மற்றும் எங்களின் அயராத உழைப்பு, இது உலகளாவிய தளத்தில் புதிய உயரங்களை எட்டுவதைக் காண மகிழ்ச்சியாகவுள்ளது” என்றார்.

 

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...