Monday, February 10, 2025
spot_img
HomeCinemaகிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

கிராமி விருது பெற்ற வயலின் மேஸ்ட்ரோ கணேஷ் ராஜகோபாலனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

Published on

இசையுலகின் மிக முக்கிய சர்வதேச அங்கீகாரமாக கருதப்படும் கிராமி விருதை வென்ற பிரபல இசைக்குழு சக்தியின் அங்கமான வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலன், லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து இன்று கடந்த பிப்ரவரி 25 அன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு நண்பர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இசை மேதைகளான ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் தலைமையிலான சக்தி குழுவினரின் சமீபத்திய படைப்பான ‘திஸ் மொமென்ட்’, சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை வென்றது.

சென்னையைச் சேர்ந்த கணேஷ் ராஜகோபாலன், தனது சகோதரர் குமரேஷுடன் இணைந்து கணேஷ் குமரேஷ் என்ற பெயரில் இசைப்பணியை செய்து வருகிறார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இத்துறையில் கோலோச்சி வரும் அவரது பங்களிப்பு இந்திய பாரம்பரிய இசையில் அழியாத முத்திரையை பதித்துள்ளது.

இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் எம்.எம். கீரவாணி போன்ற முன்னணி திரை இசை அமைப்பாளர்களுடனும் கணேஷ் பணியாற்றி உள்ளார். மதிப்புமிக்க சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

கிராமி வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கணேஷ், சக்தி இசைக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். “ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் போன்ற மேதைகளோடு இணைந்து இந்திய பாரம்பரிய இசையை உலகளாவிய ரசிகர்களுக்காக நாங்கள் தொடர்ந்து வழங்கி வருகிறோம் எங்கள் முயற்சிகளுக்கு மகுடம் வைத்தது போன்று கிராமி விருது கிடைத்துள்ளது,” என்றார் அவர்.

இசைக் கலைஞர், இசையமைப்பாளர், கல்வியாளர், ஈஸ்வரா மியூசிக் பள்ளியின் நிறுவனர் என்று பன்முகம் கொண்ட கணேஷ் ராஜகோபாலன் தொடர்ந்து பேசுகையில்: “கிராமி விருது பெற்ற குழுவில் ஷங்கர் மகாதேவன், செல்வகணேஷ் மற்றும் நான் என தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளோம். இது எங்களுக்கு மட்டுமில்லாது தமிழகம் மற்றும் இந்தியாவுக்கே பெருமை. ஜாகிர் ஹுசைன் மற்றும் ஜான் மெக்லாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், எனது இசைப் பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து கலைஞர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்தார்.

இசை எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்திய அவர், பல்வேறு இடங்களில் இருந்த சக்தி இசைக்குழுவின் கலைஞர்களால் கோவிட் காலகட்டத்தின் போது கிராமி விருது பெற்ற ஆல்பமான ‘திஸ் மொமென்ட்’ உருவாக்கப்பட்டது’ என்றார்.

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this