சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிக்க, கழுகு’ பட இயக்குநர் சத்யசிவா இயக்கிவரும், திரில்லர் திரைப்படம் ‘ஃபிரீடம் ஆகஸ்ட் 14.’
விஜய கணபதி பிக்சர்ஸ்’ பாண்டியன் பரசுராமன் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கன்னட நடிகர் கிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து, சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டனர்.
மிக வித்தியாசமான களத்தில் நடைபெறும் ஒரு கதையின் பிரதிபலிப்பை, ரசிகனுக்கு தரும் வகையில், அசத்தலான முறையில் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது. கடலுக்கு நடுவே படகில் மக்கள் நிற்க, வெடித்து சிதறும் நெருப்புக்கிடையில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இருக்கும் சசிகுமாரின் லுக் படத்தின் மீதான ஆவலைத் தூண்டுகிறது.
இன்னொரு போஸ்டரில் உணர்வுகளை ஆழமாக பிரதீக்கும் சசிகுமார், லிஜோமோல் தோற்றமும், படத்தின் பெயரும், பெரும் சுவாரஸ்யத்தை தருவதாக உள்ளது. இந்த இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
இயக்குநர் நடிகர் சசிகுமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா, 90 களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.
90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தை திரையில் கச்சிதமாகக் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90 களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு விரைவில்.
படக்குழு:
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – என் எஸ் உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் NB
கலை இயக்கம் – சிஉதயகுமார்
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்