Friday, February 7, 2025
spot_img
HomeMovie Reviewஎமகாதகன் சினிமா விமர்சனம்

எமகாதகன் சினிமா விமர்சனம்

Published on

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் தசாவதாரத்தில், பெருமாளை நம்பி ரங்கராஜ நம்பி கைவிடப்பட்ட கதையைக் காட்டியிருப்பார். நம் மண்ணில், அப்படி கடவுளை நம்பி கைவிடப்பட்டு எமலோகம் போனவர்கள் ஏராளம். அப்படியொரு கதையைத் தொட்டிருக்கிறார் ‘எமகாதகன்’ இயக்குநர் கிஷன் ராஜ்.

அந்த கிராமத்தில் வசிக்கிற குடும்பங்களில் பிறந்த மூத்த மகன்கள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மீறி செய்து கொண்டால் அவர்கள் சில மாதங்களிலேயே மரணமடைந்து விடுகிறார்கள். அந்த மரணங்கள் ‘பாஞ்சாயி’ என்பவளின் சாபத்தினால் நடக்கிறது என்பது ஊர் மக்களின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை உடைக்க நினைக்கிற இளைஞன் சரவணன், தன் காதலியை கல்யாணம் செய்து கொண்டு உற்சாகமாக வாழ்க்கையைத் தொடங்குகிறான். அவனுக்கும் அதே முடிவு…

சம்பவம் நடந்தபின் அவனை இழந்து வேதனையில் துடிக்கும் மனைவியும், அவனது இழப்பை ஜீரணிக்க முடியாத சரவணனின் நண்பனும் ‘நடந்தது என்ன?’ என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள் என்பதும், பாஞ்சாயி யார் என்பதும் அடுத்தடுத்த காட்சிகளில்… இயக்கம் கிஷன் ராஜ்

கிராமத்து இளைஞன் பாத்திரத்துக்கு பொருந்துகிற தோற்றத்தில் சரவணனாக கார்த்திக் ஸ்ரீராம். இளமைத் துடிப்புமிக்க காதலன், அன்பான கணவன், துணிச்சலாக முடிவெடுப்பவன் என தன் பங்களிப்பை அலட்டலில்லாத நடிப்பால் கச்சிதமாக செய்திருக்கிறார்.

அவரது காதல் மனைவியாக வருகிற ராஸ்மிதா ஹிவாரியின் பளபளப்பான தோற்றமும் தராளமாய் காட்டுகிற வளைவு நெளிவுகளும் இளம் இதயங்களைச் சூடாக்காமல் விடாது. மேடம், தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் நிரூபித்திருக்கிறார்.

நல்லவரா கெட்டவரா என்ற குழப்பத்தை தந்து, கிளைமாக்ஸில் அதிர்ச்சி தருகிறார் தெருக்கூத்துக் கலைஞராக வருகிற சதீஷ். அவரது அப்பாவாக வருகிறவர், மண்ணாசை பிடித்த மனிதராக உருட்டலும் மிரட்டலுமாக தான் வரும் காட்சிகளை துக்கிப் பிடிக்க, மற்றவர்களின் பங்களிப்பு நிறைவு தருகிறது.

காட்சிகளை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிற ஒளிப்பதிவாளர் எல்.டி. ஹீரோயினையும், உடல்வாகில் ஹீரோயினை போலவே இருக்கிற இன்னொரு பெண்ணையும் கவர்ச்சியாக காட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

‘கையோடு கை கோர்த்தாய்’, ‘துணையாக நீ’ என்ற பாடல்கள் மனதுக்கு இதம் தருவதோடு கதைக்களத்துக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

அந்தக் காலத்திலிருந்து இன்று வரை, ஆன்மிகம் சார்ந்த மூட நம்பிக்கை பின்னணியில் அரங்கேறும் அக்கிரம் அநியாயங்களுக்குப் பஞ்சமில்லை. அதை மனதில் வைத்து கிரைம் திரில்லர் பாணியில் எமகாதகனை உருவாக்கிய இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் பரபரப்பை பற்ற வைத்திருக்கலாம்!

எமகாதகன் – கருவாக்கத்தில் கதாநாயகன்; உருவாக்கத்தில் எளிமையானவன்!

Rating 3 / 5

Latest articles

அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்த அப்போலோ துணைத் தலைவர் உபாசனா காமினேனி!

சுகாதார முன்முயற்சியில் புதிய அத்தியாயமாக, அப்போலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு,...

வரலாற்றுக்கு முந்தைய ரகசியங்களை உடைத்து சிறந்த சினிமா அனுபவத்திற்கு உறுதியளிக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர்! 

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. பல...

தங்கப் பதக்கங்கள் குவித்து சாதனை… ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கும் யோமிதா!

மஞ்சப்பை, கடம்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த தேவாவின் மகள் யோமிதா மாவட்ட, மாநில அளவிலான ஸ்கேட்டிங்...

நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடியது சவாலாக இருந்தது! -தண்டேல் பட அனுபவம் பகிர்கிறார் சாய் பல்லவி 

நாக சைதன்யாவுடன் தான் இணைந்து நடித்துள்ள தண்டேல் படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தில்...

More like this