கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக உருவாகி, கடந்த மார்ச் 7-ம் தேதி வெளிவந்த ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதையடுத்து வெற்றிக்கு துணை நின்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பெப்பின் ஜார்ஜ், ”எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு. இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம் சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
ராகுல் மற்றும் ஸ்ரீனிவாசராவ் சார் இருவரிடமும் இந்த கதையை ஒரு ஐடியாவாக தான் சொன்னேன், அவர்கள் உடனே இதை டெவலப் செய்யுங்கள் கண்டிப்பாகச் செய்யலாம் என்றனர், பின் ஒளிப்பதிவாளர் சுஜித்திடம் இதே கதையைச் சொன்ன போது, அவரும் ஊக்கம் தந்தார். இப்படித்தான் இந்த திரைப்படம் ஆரம்பமானது.
சுஜித் நட்பு ரீதியாக மிக நெருங்கிய பழக்கம், அவர் பெரிய பட்ஜெட் படங்கள் செய்து தன்னை நிரூபித்து விட்டார், எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் மிகவும் ஊக்கம் தந்தார், இப்போது வரை அவர் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. பல காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறேன் எனப் பயந்தேன். சுஜித் அதை மிகச்சுலபமாகச் சாதித்து விட்டார். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள், 36 குடும்பங்களாகப் பிரித்து வைத்துத் தான் வேலை பார்த்தோம்.
அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்புத் தந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார். இசையமைப்பாளர் ஜெசின் மிக அட்டகாசமாகச் செய்துள்ளார். அவருக்கு நன்றி. சவுண்டில் மிரட்டிய சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி. உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நீங்கள் தந்த மிகப்பெரிய ஆதரவுக்கு நன்றி. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன்” என்றார்.

படத்தின் நாயகி ரூபா கொடுவாயூர், ”பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இப்படத்தை எங்கள் குழுவைத் தாண்டி முதல் முதலில் உங்களுக்குத் தான் காட்டினோம். நீங்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியதாக இருந்தது. பலர் என்னை அழைத்து இண்டர்வியூ எடுத்தார்கள், நீங்கள் தந்த ஆதரவு அனைத்துக்கும் மிக்க நன்றி. என் முதல் படம் இது, இப்படி ஒரு நல்ல திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி.இந்த படத்தை மிஸ் செய்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். இயக்குநர் பெப்பின் சார் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு மிக்க நன்றி. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை கீதா கைலாசம், ”இந்தக்கதை சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டயலாக் ஒரு இடத்தில் மட்டுமே இருந்தாலும், படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. இந்த கேரக்டரை என்னை நம்பி தந்ததற்கு பெப்பினுக்கு நன்றி. ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட 45 பேரும் ஒன்றாக இருந்தது மிக இனிமையான நினைவுகள், அந்த ஊர் மக்கள் எல்லோரும் நண்பர்களாகிவிட்டனர். 35 நாட்கள் ரூபா டெட்பாடியாக நடித்தார் அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெப்பினின் முதல் படம் போலவே இல்லை, மிக நன்றாக எடுத்துள்ளார். இந்தப்படத்தை மக்களிடம் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி” என்றார்.