Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaரசித்துச் சிரிக்க நகைச்சுவை... பதைபதைக்கும் காட்சிகள்... அன்பு மயில்சாமியின் 'எமன் கட்டளை'யில் ஏராளமாய் சுவாரஸ்யங்கள்!

ரசித்துச் சிரிக்க நகைச்சுவை… பதைபதைக்கும் காட்சிகள்… அன்பு மயில்சாமியின் ‘எமன் கட்டளை’யில் ஏராளமாய் சுவாரஸ்யங்கள்!

Published on

கடந்த ஆண்டு வெளிவந்த ‘குண்டான் சட்டி’ எனும் படத்தை தயாரித்த செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் டாக்டர். எஸ்.ஏ. கார்த்திகேயன் தயாரித்துள்ள புதிய படம் ‘எமன் கட்டளை.’

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்க, கதாநாயகியாக சந்திரிகா நடித்துள்ளார். அர்ஜுனன், ஆர்.சுந்தர்ராஜன், நளினி, சார்லி, வையாபுரி, பவர்ஸ்டார், அனு மோகன், மதன்பாபு, சங்கிலி முருகன், கராத்தே ராஜா
உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படத்தை எஸ்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார்.

இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று விடுகிறது. இதனால் மணப்பெண்ணும் அவளின் தந்தையும் விஷம்குடித்து விடுகிறார்கள். இதை அறிந்த இரு நண்பர்களில் ஒருவரான அன்பு மனம் வருந்தி அவமானத்தால் தற்கொலை செய்து எமலோகம் செல்கிறான். அங்கு
எமதர்மராஜா கட்டளைப்படி உப்பை தின்னவன் தான் தண்ணீர் குடிக்கணும், அதனால் நீ தான் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அதுவும் 60 நாட்களுக்குள் மணமுடித்து வைக்க வேண்டும் என்கிறான்.

பூலோகம் வந்த அன்பு நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பல மாப்பிள்ளைகள் தேடி அலைகிறான். இதற்கிடையில் அவளது தாய்மாமனும் இவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் அன்பு மீது காதல் கொள்கிறான். ஆனால் அன்பு விலகி ஓடுகிறான். இவ்வேளையில் 59 நாட்கள் முடிந்து 60 வது நாளும் பிறக்கிறது. எமன் கட்டளைப்படி அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார்களா? என்பதை நகைச்சுவையுடனும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளுடனும் படமாக்கப்பட்டிருக்கின்றது.

திரைக்கதை இயக்கம் – எஸ்.ராஜசேகர்
கதை வசனம் – வி.சுப்பையன்
ஒளிப்பதிவு – ஏ.கார்த்திக் ராஜா
இசை – என்.எஸ்.கே
பாடல்கள் – சினேகன்
நடனம் – ஜாய் மதி, சிவராக் சங்கர், ராதிகா, அபிநயஸ்ரீ
மக்கள் தொடர்பு – வெங்கட்

அனுபவமிக்க ஒளிப்பதிவாளரால் படமாக்கப்பட காட்சிகளும் பாடல் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. படத்தை வரும் பிப்ரவரியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!