Tuesday, April 22, 2025
spot_img
HomeCinemaலெவன் படத்துக்காக ஸ்ருதிஹாசன் பாடிய பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!

லெவன் படத்துக்காக ஸ்ருதிஹாசன் பாடிய பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!

Published on

நவீன் சந்திரா நடிக்க, சுந்தர் சியிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இயக்கும் படம் ‘லெவன்.’

விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும்   இந்த படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்.

 

டி. இமான் இசையில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

முதல் பாடலான ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ குறித்து பேசிய இயக்குநர், “உற்சாகம் மிகுந்த இந்த பாடல் உயர்தரத்தில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டி. இமானின் இசையும் ஷ்ருதி ஹாசனின் குரல் வளமும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

இந்த படத்தின் நாயகன் நவீன் சந்திரா ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர், ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் சசிகுமாரின் ‘பிரம்மன்’ உள்ளிட்டவற்றில் நடித்துள்ள இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் குறித்து இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசியபோது, “இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!