Wednesday, January 14, 2026
spot_img
HomeCinemaராகிணி திவேதி நடிக்கும் ‘இ மெயில்' பிப்ரவரி 9-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்!

ராகிணி திவேதி நடிக்கும் ‘இ மெயில்’ பிப்ரவரி 9-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ்!

Published on

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகையும் சமீபகாலமாக தமிழ், தெலுங்கில் கவனம் பெற்றுள்ளவருமான ராகிணி திவேதி கதையின் நாயகியாக நடிக்க, முருகா அசோக்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இ மெயில்.’

இந்த படம் காமெடி, ஆக்சன், சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.

படத்தில் இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்கள்.

கதாநாயகிக்கு திடீரென ஒரு ஈமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக சொல்லப்பட, அந்த விளையாட்டிற்குள் இறங்கிய கதாநாயகி எதிர்பாராத விதமாக ஒரு மாஃபியா கேங்கில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ். ஆர். ராஜன் படம் குறித்து பேசியபோது “ஆக்சன் காட்சிகளையும் கண்ணுக்கு விருந்தான பாடல் காட்சிகளையும் அதிக பொருட் செலவில் எடுத்திருக்கிறோம். அது மக்களை ஈர்க்கும்” என்றார்.

படக்குழு:
பாடல்கள்: அன்புசெழியன், விஷ்ணு ராம்
பாடல்களுக்கான இசை: அவினாஷ் கவாஸ்கர்
பின்னணி இசை: ஜுபின்
ஒளிப்பதிவு: செல்வம் முத்தப்பன்
படத்தொகுப்பு: ராஜேஷ் குமார்
கலை: கோபி ஆனந்த், கேஜிஎப் ஷியாம், மஞ்சு
ஸ்டண்ட்: மாஸ் மாதா
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!