HomeCinemaமம்முட்டி படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும், பசங்க ஸ்ரீராம் நடித்த 'எக்ஸிட்.'

மம்முட்டி படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும், பசங்க ஸ்ரீராம் நடித்த ‘எக்ஸிட்.’

Published on

‘பசங்க’ ஸ்ரீராம் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘எக்ஸிட்.’ படம் ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக சர்வைவல் திரில்லராக உருவாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஷாஹீன் இயக்கியுள்ளார்.

எக்ஸிட் என்றால் வெளியேறும் வழி. உயிரைப் பலி கேட்கும் ஓர் ஆபத்தான சூழலில் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, கதாநாயகன் எப்படி வெளியேறுகிறான் என்பதுதான் கதை.

தமிழில் திரில்லர் படங்கள் ஏராளம் வந்தாலும் அவற்றில் சில படங்கள் ஜாலி, கேலி என்று தடம் மாறிச் சிரிக்க வைப்பது உண்டு. ஆனால், இந்தப் படம் முழுக்க முழுக்க சீரியஸாக இருக்கும். திகில் மனநிலையைக் கடைசி வரை மாற்றாமல் இருக்கும்.

கதாநாயகன் ஸ்ரீராம் எப்போதும் நடிப்புக்கு முக்கியத்துவம் தருபவர். அவரது நடிப்பாற்றலுக்கு மதிப்பளிக்கும் வகையில் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் அவரையே நாயகனாக நடிக்க வைத்துள்ளனர்.

வில்லனாக விஷாக் நாயர் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் மம்முட்டி படத்தில் வில்லனாக நடித்தவர். ‘ஜெயிலர்’ படத்தில் வரும் விநாயகன் போல, பொதுவாகப் படங்களில் வரும் பாத்திரங்களுக்கு மிருக குணத்தை மட்டும்தான் காட்டுவார்கள். இந்த படத்தில் வரும் வில்லனோ உடல் அசைவுகளிலும் மிருகத்தைப் போலவே மாறியுள்ளார். நான்கு கால்களால்தான் நடப்பார். பேசவே மாட்டார். ஆனால், உணர்ச்சிகள் காட்டுவார். மனித மாமிசத்தைக் கடித்து உண்ணுவது போன்ற தனது குரூர செயல்களின் மூலம் பதற வைப்பார். அவரது தோற்றமும் உடல் மொழியும் அசல் மிருகத்தை நினைவூட்டிப் பார்ப்பவர்களை மிரட்டும்.

ரனிஷா ரஹிமான்,ஹரிஷ் பெராடி, வைஷாக் விஜயன், ஆஸ்லின் ஜோசப், சூரஜ் பாப்ஸ், ஸ்ரீரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தை ப்ளூம் இண்டர்நேஷனல் சார்பில் வேணுகோபாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

படம் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது. அதே மாதம் ஒன்பதாம் தேதி மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ வருகிறது. அதற்குப் போட்டியாக இந்த படத்தை வெளியிடுகிறார்கள். அதிலிருந்து இந்தப் படத்தின் மீது படக்குழுவினர் வைத்துள்ள நம்பிக்கை தெரிகிறது.

‘பசங்க’ திரைப்படம் மூலம் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சற்றே வளர்ந்து, ‘கோலி சோடா’ வில் பேசப்பட்டு ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து பெரியளவில் பிரபலமானவர் ஸ்ரீராம்.

படக்குழு:
கதை: அனீஷ் ஜனார்தன்
திரைக்கதை: அனீஷ் ஜனார்தன், ஷாஹீன்
ஒளிப்பதிவு: ரியாஸ் நிஜாமுதீன் ,
படத்தொகுப்பு: நிஷாத் யூசுப்
இசை: தனுஷ் ஹரிகுமார், விமல்ஜித் விஜயன்
ஒலி வடிவமைப்பு: ரெங்கநாத் ரவி
கலை: எம். கோயா
ஆடை வடிவமைப்பு: சரண்யா ஜீபு

Latest articles

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ஃபௌசி டிசம்பர் 3-ம் தேதி வெளியாகிறது!

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியும், நினைவாற்றலும் பெருக நடிகர் ஆர்யன் ஷாம் முன்னிலையில் ஆயுர்வேத ஸ்வர்ணபிராசன மருந்தை வழங்கிய அமைச்சர் வெங்கடரமணன்!  

பாரம்பரியம், மருத்துவம், திரையுலகம் மூன்றும் ஒன்றிணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக 120 ஆண்டுகள் பழமையான வெங்கடரமணா ஆயுர்வேத மருந்தகத்தின்...

அருள்வான் சினிமா விமர்சனம்

கல்வியின் அருமை புரியாமல், நமக்கெதற்கு கல்வி என்ற மனநிலையில் வாழ்கிற மலை வாழ் மக்கள். அவர்களில் ஒருவரான சிறுமி...

Over 100 Plastic Surgeons from Across India Gather in Chennai to Mark World Plastic Surgery Day!

Chennai Celebrates World Plastic Surgery Day with National High-Definition Liposuction Masterclass and Public Awareness...

More like this