Thursday, January 22, 2026
spot_img
HomeCinema'தேசியத் தலைவர்' படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்த ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கும் படக்குழுவினருக்கு வி...

‘தேசியத் தலைவர்’ படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்த ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கும் படக்குழுவினருக்கு வி சி க தலைவர் தொல் திருமாவளவன் வாழ்த்து!

Published on

‘தேசியத் தலைவர்’ படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக வாழ்ந்திருக்கும் ஜெ.எம்.பஷீர் அம்பேத்கராக நடிக்கும் படம் ‘டாக்டர் அம்பேத்கர்.’

வி. செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்கிறார்.

இந்திய அரசமைப்பு சட்டத்தை இயற்றியது டாக்டர் அம்பேத்கரின் சிறப்புகளை உலக மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் அவரது வரலாறு தொடர்பான புத்தகங்களை ஆய்வு செய்து, அவரை பின்தொடர்வோரிடம் தகவல்களை பெற்று இந்த திரைப்படம் உருவாகிறது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை ‘டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது, ‘இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அம்பேத்கரின் கருத்துகளை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

அவர் சொன்னபடி படம் பல்வேறு மொழிகளில் பான் வேர்ல்டு திரைப்படமாக உருவாகவுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

டாக்டர் அம்பேத்கர் பிறந்த ஊரான மத்திய பிரதேசத்திலுள்ள மோவ், கல்வி பயின்ற புனே, வாழ்ந்த மும்பை, அமைச்சராக பணியாற்றிய தில்லி, பாரிஸ்டர் பட்டம் பெற்ற லண்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இப்படம் படமாக்கப்பட உள்ளது.

அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’, ஆர்யா நடித்த ‘ஓரம் போ’, சத்யராஜ் நடித்த ‘6.2’, மற்றும் ‘நீ வேணும்டா செல்லம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் பேனரில் தயாரித்த வி. பழனிவேல் தற்போது ‘டாக்டர் அம்பேத்கர்’ படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

Latest articles

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...

தீவிரமான படைப்பாக ‘தடயம்.’ மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் சமுத்திரகனி!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி...

More like this

பாரத்- சான்வி மேக்னா நடிப்பில் சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நல்ல கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்குவதை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் நோக்கமாக கொண்டிருக்கிறது. அந்த...

‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகள் பகிர்ந்த அனுபவங்கள்!

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று கதையான ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ள ரக்ஷனா இந்துசூடன்,...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டு...
error: Content is protected !!