Tuesday, October 8, 2024
spot_img
HomeCinemaநந்தமுரி கல்யாண் ராமின் ‘டெவில்’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க, சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மாளவிகா நாயர்!

நந்தமுரி கல்யாண் ராமின் ‘டெவில்’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க, சக்திவாய்ந்த அரசியல்வாதியாக மாளவிகா நாயர்!

Published on

தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நந்தமுரி கல்யாண் ராம் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘டெவில்.’ படத்தில் அவர் ஏற்றிருக்கும் மூர்க்கத்தனமாக வேடத்தை குறிக்கும் விதத்தில் ‘டெவில்’ என பெயரிடப்பட்டு, ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற டேக்லைனுடன் வருகிறது.

படத்தில் நந்தமுரி கல்யாண் ராம், மிகவும் கடினமான ரகசியத்தைத் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக ரசிகர்களின் கவனத்தை கவரவுள்ளார்.

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஸ்ரீகாந்த் விசாவின் திறமையான குழு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை அழகாக வடிவமைத்துள்ளது.

அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த ஸ்பை த்ரில்லர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

அதையடுத்து படத்தில் மணிமேகலா எனும் பெயரில் சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் நடிக்கும் கதாநாயகி மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அரசியல்வாதியாக அவர் தோன்ற, அமைதியை வெளிப்படுத்தும் புறாக்கள் காணப்படுகின்றன.

படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

படக்குழு:-
தயாரிப்பு நிறுவனம்: அபிஷேக் பிக்சர்ஸ்
வழங்குபவர்: தேவன்ஷ் நாமா
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்: அபிஷேக் நாமா
கதை, திரைக்கதை, வசனம்: ஸ்ரீகாந்த் விசா
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன்.எஸ்
இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: காந்தி நதிக்குடிகர்
எடிட்டர்: தம்மிராஜு
தலைமை நிர்வாக அதிகாரி: பொதினி வாசு
கதை உதவி : பிரசாந்த் பரடி
இணை இயக்குநர்: சலசனி ராமராவ்
ஆடை வடிவமைப்பாளர்: விஜய் ரத்தினம் MPSE
ரீ ரெக்கார்டிங் மிக்ஸ் : ஏ எம் ரஹ்மத்துல்லா ஏ. எம். ரஹ்மத்துல்லா
சண்டைக்காட்சி: வெங்கட் மாஸ்டர்
போஸ்டர் வடிவமைப்பு: கன்னி ஸ்டுடியோஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: வால்ஸ் & டிரெண்ட்ஸ்
ஆடை வடிவமைப்பு: அஸ்வின் ராஜேஷ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Latest articles

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான ‘வாழை’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 11-லிருந்து ஸ்டிரீமாகிறது!

மாரி செல்வராஜின் ப்ளாக்பஸ்டர் வெற்றித்திரைப்படமான 'வாழை' திரைப்படத்தை வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் அக்டோபர் 11-ம் தேதியிலிருந்து...

இந்த படம் இளைஞர்களை கவர்வதோடு அவர்களின் மூளைக்கும் வேலை கொடுக்கும்! -பிளாக் பட பிரஸ் மீட்டில் நடிகர் ஜீவா பேச்சு 

ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள பிளாக் படம் வரும் அக்டோபர் 11-ம்...

நடிகர் கே சி பிரபாத்துக்கு யாமம் படப்பிடிப்பில் ஹார்ட் அட்டாக்! சிம்ஸில் தொடரும் சிகிச்சை.

கே சி பிரபாத் பில்லா பாண்டி படம் மூலம் தமிழ்த் திரையுலகில்  தயாரிப்பாளராக கால்பதித்தார். அந்த படத்தில் நடிகராக...

தமிழ்நாடு முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற, சென்னை டிடிகே சாலை துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழா!

சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான...

More like this