யோகிபாபு கதைநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், சுரேஷ் சங்கையா இயக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படைப்பாக உருவாகிறது. லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சுரேஷ் சங்கையா இயக்கி வெளியான ஒரு கிடாவின் கருணை மனு’, சத்திய சோதனை’ படங்கள் எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அவர் இயக்கும் புதிய பட அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் தந்துள்ளது.
படத்தை ஆர் பி டாக்கீஸ் எஸ் ஆர் ரமேஷ் பாபு, பாக்ஸ் ஆஃபீஸ் ஸ்டுடியோஸ் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் காட்சிகள், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.
படம் குறித்து நடிகர் யோகி பாபுவிடம் கேட்டபோது, “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு, சத்திய சோதனை படங்களை பார்த்திருக்கிறேன். இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பு. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன்” என்றார்.
இயக்குநர் சுரேஷ் சங்கையாவிடம் கேட்டபோது, “இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன், பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். சமூகத்திற்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்” என்றார்.
படக்குழு:
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு: வி தியாகராஜன்
கலை இயக்கம்: பி எல் சுபேந்தர்
படத்தொகுப்பு: ஆர். ராமர்