Friday, April 25, 2025
spot_img
HomeCinemaதெருக்கூத்து கலைஞர்களின் கடும் உழைப்பை போற்றும் படம் இது! -‘டப்பாங்குத்து' படத்தின் இசை வெளியீட்டு விழாவில்...

தெருக்கூத்து கலைஞர்களின் கடும் உழைப்பை போற்றும் படம் இது! -‘டப்பாங்குத்து’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திண்டுக்கல் லியோனி பேச்சு

Published on

‘மருதம் நாட்டுப்புற பாடல்கள்’ எனும் நிறுவனம் சார்பில் எஸ். ஜெகநாதன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டப்பாங்குத்து.’

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எஸ். டி. குணசேகரன் எழுத, கிராமிய கலையின் நுட்பத்தை ஆய்வு செய்துள்ள ஆர். முத்து வீரா இயக்கியிருக்கிறார்.

‘தெற்கத்தி பொண்ணு’ சீரியலில் நடித்து பிரபலமான சங்கரபாண்டி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக தீப்தி, துர்கா என இருவர் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் தெருக்கூத்து கலைஞர்களும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் 7.10.2023 அன்று சென்னையில் நடந்தது. பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும், நாட்டுப்புறக் கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஐ. லியோனி பேசும்போது, ”நான் இன்று இந்த அளவிற்கு புகழ் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடித்தளமிட்டவர் மதுரை ராம்ஜி கேசட் நிறுவனம்தான். என்னையும் என்னுடைய குழுவினரையும் பேச வைத்து, அதை பதிவு செய்து, உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனத்தினர். அதன் பிறகு ஏறக்குறைய 15 தலைப்புகளில் பேச வைத்து உலகம் முழுவதும் இன்று வரை என் புகழை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘டப்பாங்குத்து’.

டப்பாங்குத்து என்ற சொல் எப்படி பிரபலமானது என்றால், நரிக்குறவர் இன மக்கள் தங்களது கழுத்தில் டால்டா டப்பாக்களை அணிந்து கொண்டு அதில் தாளம் போட்டு பாட்டு பாடுபவர்கள். இதை பார்த்த இரண்டு முதல்வர்களான எம்ஜிஆர்- ஜெயலலிதாவும் தங்களது கழுத்தில் அணிந்து, ஒரு திரைப்படத்தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க..’ என பாட்டு பாடி பிரபலப்படுத்தினார்கள். நாட்டுப்புறப்பாட்டு என்பது நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தது.‌

கரகாட்டத்திற்கு ‘கரகாட்டக்காரன்’ என்று ஒரு படம் வந்தது. வில்லுப்பாட்டிற்கு ‘வில்லுப்பாட்டுக்காரன்’ என்று ஒரு படம் வந்தது. பாட்டு படிப்பவனுக்கு ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்ற படம் வந்தது. ஆனால் தெருக்கூத்து என்ற ஒரு கலையை மையப்படுத்தி வெளியாக இருக்கும் முதல் திரைப்படம் இந்த ‘டப்பாங்குத்து’. தெருக்கூத்து என்பது ஒரு இருபது அடிக்குள் தான் இருக்கும். இங்கு ஒரு குழு, அங்கு ஒரு குழு, ஓடி ஓடி ஆடும். இந்த தெருக்கூத்தில் ஆடும் கலைஞர்கள் இந்தப் பாட்டு தான் என்றெல்லாம் அனைத்து வகையான பாடல்களும் பாடுவார்கள். மக்களை 10 முதல் 11 மணி நேரம் வரை சிரிக்க வைப்பதற்கு தெருக்கூத்து கலைஞர்களால் மட்டுமே இயலும்.

அந்த கலைஞர்களின் கடும் உழைப்பை போற்றும் வகையில் உருவாகியிருக்கும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகர் சங்கரபாண்டி பேசும்போது, ”மதுரை சார்ந்த தெருக்கூத்து கலைஞர்களின் எளிய வாழ்வியலை எதார்த்தமாக விவரிக்கும் இந்த படத்தில் நான் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையை தமிழ் திரை உலகினர் வன்முறைக் களமாக காட்சி படுத்தி வருகிறார்கள். ஆனால் அசலில் மதுரை ஒரு கலை நகரம். மதுரை நகரம் 6000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கலைகளை வளர்த்தெடுத்து வரும் நகரம். அப்பகுதியில் வாழும் தெருக்கூத்து எனும் கலை வடிவத்தை அந்த கலைஞர்களின் வாழ்வியலை எளிய படைப்பில் சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள் தான். இந்தப் பாடல்களைப் பாடி வீதியோர நாடகங்களில் நடித்து தான் நான் இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறேன். அந்த காலத்து தெருக்கூத்து கலையின் கலை வடிவத்தினை 2K கிட்ஸ்களும் தெரிந்து கொள்ளும் வகையில் படைப்பை உருவாக்கி இருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஆர். முத்து வீரா பேசும்போது, ”தமிழின் தொன்மையான இசை வடிவங்களான தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என பல வகை உண்டு. இவை அனைத்தையும் ஒலிப்பதிவு நாடாக வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் வெளியிட்ட நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து 15 பாடல்களை தேர்வு செய்து அதனை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்” என்றார்.

Latest articles

வல்லமை சினிமா விமர்சனம்

போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அந்த வன்முறையை...

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

More like this

வல்லமை சினிமா விமர்சனம்

போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அந்த வன்முறையை...

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...
error: Content is protected !!