Tuesday, June 18, 2024
spot_img
HomeCinemaஆறாவது புரமோ வீடியோவில் ‘பந்தா'வாக அசத்திய ஷாருக்கானின் ‘டங்கி' படக்குழு!

ஆறாவது புரமோ வீடியோவில் ‘பந்தா’வாக அசத்திய ஷாருக்கானின் ‘டங்கி’ படக்குழு!

Published on

படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டுகிற விதத்தில் டங்கி பட புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், படக்குழு ஒவ்வொரு நாளும் புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.

ஏற்கனவே டங்கி படத்திலிருந்து ஐந்து வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது டங்கி டிராப் 6: தில்ஜித் தோசன்ஜ்சின் அட்டகாசமான குரலில் ‘பந்தா’ பாடல் வெளியாகியுள்ளது.

படத்தில் வரும் ஷாருக்கானின் ஹார்டி கேரக்டரை ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும், அறிமுகப்படுத்தும் ‘பந்தா’ பாடலானது, பெப்பி டிராக் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலை தில்ஜித் தோசன்ஜ் பாடியுள்ளார், பாடலின் வரிகளை குமார் எழுதியுள்ளார் மற்றும் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.

ஷாருக்கானின் அறிமுகப் பாடல் நிச்சயம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

இன்னொருபுறம், ஷாருக் துபாயில் உள்ள ‘தி வோக்ஸ் சினிமா’ மற்றும் குளோபல் வில்லேஜை பார்வையிட்டதோடு, அங்கு அவர் படத்தை விளம்பரப்படுத்தும் ஒரு பெரிய நிகழ்வில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஏற்கனவே உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்களுக்கு, தயாரிப்பாளர்கள் டங்கி டைரிஸ் என்ற பெயரில் ஒரு சிறப்பு விருந்தை அறிவித்துள்ளனர்.

டங்கி திரைப்படத்தின் அனுபவங்களை அந்த உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கான், மற்றும் டாப்ஸி பண்ணு பங்குபெறும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி டங்கி டயரிஸ் எனும் பெயரில் வெளியாகியுள்ளது.

#DunkiDiaries முழு வீடியோ இதோ
https://bit.ly/DunkiDiaries

படம் ஏற்கனவே அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனைகளை படைக்க ஆரம்பித்து விட்டது. இதுவரையிலான பல பெரிய படங்களை முறியடித்துள்ளதில், பார்வையாளர்களின் உற்சாகம் நன்றாகவே தெரிகிறது.

டிசம்பர் 22 ஆம் தேதி, ராஜ்குமார் ஹிரானி உருவாக்கத்தில் மனதைக் கவரும், அன்பான உலகத்தைப் பார்க்க பார்வையாளர்கள் தயாராகி வரும் நிலையில், டங்கி தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள “டங்கி டிராப் 6 பந்தா” பாடல் மற்றும் டங்கி டயரீஸ் வீடியோக்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Latest articles

நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா நடிக்கும் ‘பருவு’ சீரிஸின் முதல் எபிசோடு ZEE5 தளத்தில் இலவசம்! 

சாதிப்பாகுபாடு, கவுரவக் கொலை... நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ZEE5 'பருவு' சீரிஸில் பரபரப்பான திருப்பங்கள்! நிவேதா பெத்துராஜ், நரேஷ் அகஸ்தியா,...

பிரபாஸ் ரசிகர்களை உற்சாகமாக்கிய ‘கல்கி 2898 கி.பி’ படத்திலின் ‘பைரவா ஆன்தம்.’

பெரும் காத்திருப்பிற்கு பிறகு 'கல்கி 2898 கி.பி' படத்திலிருந்து 'பைரவா ஆன்தம்' பாடலை வெளியாகியுள்ளது. உலகளாவிய பிரபலங்களாக திகழும்...

ஆஹா ஓடிடி தளத்தின் ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரீஸ் 2 பூஜையுடன் துவக்கம்!

தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த, பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக...

‘தியா’ பிருத்வி அம்பர், ‘ரதாவரா’ இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் உருவாகும் ‘சௌகிதார்.’ அறிவிப்பை வெளியிட்டார் ‘ரோரிங் ஸ்டார்’ ஸ்ரீ முரளி!

'தியா' புகழ் நடிகர் பிருத்வி அம்பர் மற்றும் 'ரதாவரா' படத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா ஆகிய இருவரும் இணையும்...

More like this