Friday, April 25, 2025
spot_img
HomeCinemaஸ்ரீதர் மாஸ்டர் ஏற்பாட்டில் டிசம்பர் 30-ம் தேதி சென்னையில், நம் தலைமுறையில் சாதித்த நடனக் கலைஞர்களின்...

ஸ்ரீதர் மாஸ்டர் ஏற்பாட்டில் டிசம்பர் 30-ம் தேதி சென்னையில், நம் தலைமுறையில் சாதித்த நடனக் கலைஞர்களின் நினைவை போற்ற ‘டான்ஸ் டான்’ கலை விழா!

Published on

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, டான்ஸ் டான் (Dance Don Guru Steps 2003 Kollywood Awards) என்ற விழா பிரமாண்டமாக வரும் டிசம்பர் 30-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவில் நடனக் கலை மூலம் பெரும்புகழ் பெறு, நம் நினைவுகளிலிருந்து மறைந்து போன நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகிறது.

இந்த டான்ஸ் டான் விழா குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர், அக்‌ஷதா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், DKS பாபு மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலகளவில் இந்தியா சினிமா ஆடல் கலை மற்றும் பாடலுக்கு பெயர் பெற்றது. பாடலும் ஆடலும் இல்லாமல் இந்திய சினிமா இல்லை. இங்கு சினிமா உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக, சினிமாவிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடனக் கலையை பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களின் பணி அளப்பரியது.

இத்தனை புகழ்மிக்க நடனக் கலையை ஆரம்ப காலத்தில் பயிற்றுவித்த பல புகழ்மிகு நடனக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை.

1950 களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை.

நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை, நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கௌரவிக்கப்படவுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த்திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

Latest articles

வல்லமை சினிமா விமர்சனம்

போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அந்த வன்முறையை...

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

More like this

வல்லமை சினிமா விமர்சனம்

போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அந்த வன்முறையை...

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...
error: Content is protected !!