Thursday, January 23, 2025
spot_img
HomeCinemaகாதல் கல்யாண விஷயங்களில் பெண்ணுக்கோ, ஆணுக்கோ விருப்பம் இல்லையென்றால் விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை சொல்லும்...

காதல் கல்யாண விஷயங்களில் பெண்ணுக்கோ, ஆணுக்கோ விருப்பம் இல்லையென்றால் விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படம் இது! -‘செல்ல குட்டி’ பட டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் இளம் ஹீரோ டாக்டர் ரித்தோ பேச்சு

Published on

புதுமுகங்கள் டாக்டர் டிட்டோ மற்றும் மகேஷ் கதாநாயகர்களாக நடிக்க, சகாயநாதன் இயக்கத்தில் 90-களில் பிறந்தவர்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, நட்பு மற்றும் காதலை பிரதிபலிக்கும் வண்ணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘செல்ல குட்டி’ திரைப்படம் வரும் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகிறது.

முன்னதாக பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா செப்டம்பர் 30-ம் தேதி சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு, விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் பி.ஆர்.ஓ சங்க தலைவர் விஜயமுரளி, நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், விநியோகஸ்தன் ஜெனிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் நாயகன் டாக்டர் ரித்தோ பேசுகையில், “நா.முத்துக்குமார் சார் வரிகளில் ஒரு சிறப்பான பாட்டு எனக்கு கிடைத்திருக்கிறது. காதல் பாடல் மக்களுக்கு பிடிக்கும் வகையில் வந்திருக்கிறது. இந்த படம் காதல் கதையாக இருந்தாலும், அதை சாதாரணமாக சொல்லாமல் 90களில் நடக்கும் காதல் கதையாக மீண்டும் நம் நினைவுக்கு அதை கொண்டு வரும் வகையில் சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நிறைய நல்ல விசயங்கள் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ விருப்பம் இல்லை என்றால் அவர்களை விட்டு விட வேண்டும். இருவருக்கு சேர்ந்து வருவது தான் காதல், என்பதை இந்த படத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள், நிச்சயம் செல்ல குட்டி படம் ரசிகர்களுக்கு பிடிக்கும், நன்றி” என்றார்.

படத்தின் மற்றொரு நாயகன் மகேஷ், “உழைத்த பணத்தை வைத்து தயாரிப்பாளர் மணிபாய் சார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் எங்களை போன்ற புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விசயம். அந்த படத்திற்கு ஒரு நிகழ்ச்சியை வைத்து, எங்களை மேடை ஏற்றியிருக்கும் அவர் மனசு ரொம்பவே பெரியது. அன்பே சிவம் படத்தில் சொல்வது போல் மனசு தான் கடவுள். ஆனால், அந்த மனசுக்காக படம் ஓடவில்லை. ஆனால், இந்த படம் கதை நன்றாக இருக்கும், நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும், நன்றி” என்றார்.

படத்தின் நாயகி சிமோ அத்வானி, “செல்ல குட்டி படத்தில் அருமையான மெசஜ் இருக்கு. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய இந்த படம் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும், என்று நம்புகிறேன்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் வி.மணிபாய் பேசுகையில், “செல்ல குட்டி படத்தையும், படக்குழுவினரையும் வாழ்ந்த வந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. உங்களை போல் தான் நானும் ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் இந்த சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கோயம்பேட்டு மார்க்கெட்டில் மூட்டை தூக்கி தான் என் வாழ்க்கையை தொடங்கினேன். நான் பெரிய பணக்கார வீட்டு பையன் கிடையாது, கடுமையாக உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன், நீங்கள் தான் செல்ல குட்டி படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து என்னை வாழ வைக்க வேண்டும்” என்றார்.

Latest articles

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...

’குடும்பஸ்தன்’ உங்களை சிரிக்க வைத்து,மனஅழுத்தத்தைக் குறைக்கும்! -இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உருவாகியுள்ளது. இந்தப் படம்...

More like this

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...