வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், பிபின், ஹுசைனி
உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.’
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 18 -ம் தேதி சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் வைபவ் பேசியபோது,” தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்து வாழ்த்திய சகோதரர் அருண் விஜய், இமான், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படம் நகைச்சுவை விருந்தாக இருக்கும்” என்றார்.
இசையமைப்பாளர் டி இமான்,”பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் இத்திரைப்படத்தில் பணியாற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பிடிஜி யுனிவர்சல் இசை வெளியீட்டு நிறுவனத்தையும் துவங்கி உள்ளனர். அதன் மூலம் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும், பாடலாசிரியர்களும், பாடகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
அருண் விஜய்,”பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் டிமான்ட்டி காலனி-2 சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதேபோல இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நானும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
அஜய் ஞானமுத்து ,”இந்த டீசரை ஏற்கனவே பார்த்து விட்டேன். முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக வந்துள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நிகழ்வில் நடிகை அதுல்யா, நடிகர்கள் ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய்,
ரெடின் கிங்ஸ்லி, மணிகண்டா ராஜேஷ், நடன இயக்குநர் அஜய் ராஜ், தயாரிப்பாளர் பிடிஜி யுனிவர்சல் பாபி பாலச்சந்திரன், வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ, சண்டைப் பயிற்சியாளர் டான் அசோக் உள்ளிட்டோரும் பேசினார்கள்.