Tuesday, March 10, 2026
spot_img
HomeGeneralஅனிமேஷன் சுவாரஸ்யத்துடன் போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக ‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு' பாடல் வெளியீடு!

அனிமேஷன் சுவாரஸ்யத்துடன் போதைப்பொருளின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக ‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’ பாடல் வெளியீடு!

Published on

திங்க் மியூஸிக் (Think Music India) நிறுவனம் போதைப்பொருள் பழக்கத்தினால் விளையும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, எங்கள் சமீபத்திய திட்டமான ‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

வைசாக் எழுதி, பாடியுள்ளார் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்துவதையும் இந்தப் பாடல் நோக்கமாக கொண்டுள்ளது.

பாடல் வெளியீடு குறித்து பாடலை வெளிட்ட நிறுவனத்தின் தரப்பிலிருந்து ‘போதைப் பொருள் மூலம் நடக்கும் குற்றங்களைத் குறைக்கவும் சமூகத்தின் பாதுகாப்பை வளர்ப்பதிலும் தமிழ்நாடு குற்றப் புலனாய்வுத் துறையின் பங்கு (டிஎன் சிஐடி) போற்றுதலுக்கு உரியது. சமூகத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்த முயற்சியை TN CIDக்கு மிகுந்த மரியாதையுடன் அர்ப்பணிக்கிறோம்.

‘லைஃப் இருக்கு டிரக்ஸ் எதற்கு’ என்பது வெறும் பாடல் என்பதையும் தாண்டி, இதனை செயல்படுத்த வேண்டும் என்பதற்கான உணர்ச்சிமிக்க அழைப்பு. அழுத்தமான பாடல் வரிகள், உற்சாகமூட்டும் இசை மற்றும் ஏஐ அனிமேஷனைப் பயன்படுத்தி புதிய அணுகுமுறையில், போதைப்பொருள் விளைவிக்கும் தீங்கைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிக்க முயற்சி செய்கிறோம். இந்தப் பாடல் மூலம் உரையாடல்களைத் தொடங்குவதும், இதன் நோக்கத்தை செயல்படுத்த வைப்பதும், இறுதியில் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் பிடியிலிருந்து விடுபட்ட ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பதே எங்கள் குறிக்கோள்.

இசையின் சக்தி மற்றும் ஏஐ அனிமேஷனின் இந்த புதுமையான பயன்பாடு மூலம் அதிக அளவிலான பார்வையாளர்களை இந்தப் பாடல் சென்றடைந்து நம்பிக்கை தரும் செய்தியை வழங்குவோம் என்று நம்புகிறோம். எதிர்கால தலைமுறையினருக்கு போதைப் பொருள் இல்லாத ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க நாம் கைகோர்ப்போம்’ என்கிறார்கள்.

Latest articles

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...

99/66 படத்தில் ரசிகர்களுக்கு திகில் அனுபவம் தந்த பின்னணி இசைக்கு கிடைத்த அங்கீகாரம்… அடுத்தடுத்த படங்கள், ஆல்பம் சாங்ஸ் என உற்சாகமாக பயணிக்கும் இசையமைப்பாளர் அமர்கீத்!  

தமிழ்த் திரையுலகில் இளைஞர்களின் காலம் இது. இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப படங்களை இயக்குவதாகட்டும், பாடல்களைக் கொடுப்பதாகட்டும் புதியவர்களே அதிகம்...

More like this

பெண்கள் தினத்தில் ‘பேட்ரியாட்’ படத்திலிருந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் வெளியானது! 

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் 'பேட்ரியாட்' திரைப்படத்தில் முன்னணி நடிகை...

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு...

காதலில் ஏற்படும் பிரச்சனைகளை பெண்களின் பக்கமிருந்து அணுகும் விறுவிறுப்பான ‘ஃபேக் ஐடி’ குறும்படம்… குட்டி ஸ்டோரி யூ டியூப் சேனலில் வெளியாகி குவிகிறது வரவேற்பு! 

https://www.youtube.com/watch?v=sFbVDGdJdyk தன் காதலை ஏற்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கும் காதலன், அவனுக்கு தக்க பாடம் புகட்ட கடவுள்...
error: Content is protected !!