ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘டிமான்ட்டி காலனி 2’, வைபவ், அதுல்யா நடித்து விரைவில் வெளிவரவுள்ள ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படங்களைத் தயாரித்த, அருண் விஜய் நடிப்பில் ‘ரெட்ட தல’ படத்தை பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பி டி ஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனம், அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.
படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளிவரும்.
டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் பாபி பாலச்சந்திரன் பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய டாக்டர் எம் மனோஜ் பெனோ தற்போது பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை, மக்களுக்கு பிடித்தவாறு தயாரிக்கும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.