Tuesday, November 5, 2024
spot_img
HomeCinemaகடலில் நடந்த, பிக்பாஸ் ராஜு நடிக்கும் 'பன் பட்டர் ஜாம்' படத்தின் செகன்ட் லுக் வெளியீடு!

கடலில் நடந்த, பிக்பாஸ் ராஜு நடிக்கும் ‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் செகன்ட் லுக் வெளியீடு!

Published on

பிக்பாஸ் ராஜூ, ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும் அழகான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பன் பட்டர் ஜாம்.’

சைஸ் ஜீரோ, பாரம் படங்களின் திரைக்கதையை எழுதியவரும், காலங்களில் அவள் வசந்தம் பட இயக்குநருமான ராகவ் மிர்தாத், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது லுக், நடுக்கடலில் கோர்டிலியா குரூஸ் சொகுசுக்கப்பலில், வெளியிடப்பட்டது. தமிழ் திரை வரலாற்றில் முதல் முறை, ஒரு சொகுசுகப்பலில் ஒரு திரைப்படத்தின் போஸ்டர் வெளியாவது இதுவே முதல் முறை!

இந்நிகழ்வில் படக்குழுவினர் அங்குள்ள பயணிகளுடன் உரையாடி, படத்தினைப்பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். படக்குழுவினர் இந்நிகழ்வின் கிளிம்ப்ஸே வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்வீடியோ தற்போது இணையமெங்கும் வைரலாக பரவி வருகிறது.

Latest articles

ராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் படத்தில் ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ சாய் அபயங்கர்!

இசையின் மீது தீராத ஆர்வமும் காதலும் கொண்டவர்கள் திரைத்துறையிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுகிறார்கள். சாய் அபயங்கர் தனது...

இது மாஸ் ஆக்சன் படம்போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த உணர்வு ஏற்படும்! -‘தி டார்க் ஹெவன்’ பட நிகழ்வில் நடிகர் நகுல் பேச்சு

நகுல் போலீஸாக நடித்திருக்கும் 'தி டார்க் ஹெவன்' படத்தை 'டி3' பட இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ளார். படம் விரைவில்...

சர்வதேச அளவில் 108 விருதுகளை வென்ற ஆவணப்படம் ‘கழிப்பறை’ முழு நீள திரைப்படமாகிறது.

சர்வதேச அளவில் 108 விருதுகளை வென்று, பலரது கவனத்தையும் ஈர்த்த 'கழிப்பறை' என்ற ஆவணப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி...

மாதவன், மடோனா செபாஸ்டியன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி விரைவில் ரிலீஸ்!

மாதவன் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதோடு, இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தற்போது 'அதிர்ஷ்டசாலி' என்ற படத்தில்...

More like this