பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் இணையும் படம் ‘பில்லா ரங்கா பாட்ஷா.’ இந்த படம் அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாராகவுள்ளது. படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் கதையை அறிமுகப்படுத்தும் கான்செப்ட் வீடியோ கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும்படி வெளியாகியுள்ளது.
https://x.com/KicchaSudeep/status/1830466797059108911
இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான விவரங்களுடன், தனித்துவமான திரைக்கதையை படைப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அதை நிரூபிக்கும்படி அமைந்துள்ளது.
இந்த கான்செப்ட் வீடியோ கி.பி 2209 இல் எதிர்காலத்தில் நடக்கும் கதைகளத்தினை பற்றிய பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. சுதந்திர தேவி சிலை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ்மஹால் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது, ஒருவன் தனியாக உலகை ஆள்வது போல் தெரிகிறது. மூன்று வெவ்வேறு பகுதிகளையும் காலநிலையும் இருப்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரசிகர்கள் பல நுணுக்கமான விவரங்களை கண்டறியும் வகையில் பல ஆச்சரியங்களையும் தொகுத்து தந்துள்ளது.
படக்குழு:-
தயாரிப்பு: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
எழுத்து, இயக்கம்: அனுப் பண்டாரி
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா
மக்கள் தொடர்பு : யுவராஜ்