ஜீவா, பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் ‘பிளாக்.’ ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக இருக்கும்படி படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது.
படம் வரும் செப்டம்பரில் வெளியாகவுள்ள நிலையில் படம் பற்றி இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியிடம் கேட்டபோது, ”நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்புப் பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம்.
ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தும் இடமாக பார்க்கப்படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். அதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படி பட்ட கதையில் இந்த படம் உருவாகியுள்ளது” என்றார்.
இந்த படத்தை ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ என பெரியளவில் வெற்றி பெற்ற, கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.