HomeMovie Review‘ஆர் யூ ஒகே பேபி' சினிமா விமர்சனம்

‘ஆர் யூ ஒகே பேபி’ சினிமா விமர்சனம்

Published on

 

‘சொல்வதெல்லாம் உண்மை’ என தொலைக்காட்சியில் தான் நடத்திய ஏடாகூடமான, எக்குத்தப்பான, வில்லங்க, விவகார குடும்பப் பஞ்சாயத்துகளிலிருந்து ஒரு உணர்வுபூர்வமான கதையைத் கையிலெடுத்து, அதற்கு அட்டகாசமான திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் லெஷ்மி ராமகிருஷ்ணன்.

வறுமைச் சுழலால் பணத்துக்கு ஆசைப்படும் ஷோபா – தியாகி தம்பதி தங்கள் குழந்தையை, கல்யாணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாத பணக்கார தம்பதிக்கு தூக்கிக் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒரு வருட காலத்தில் மனம் மாறுகிற ஷோபா, தன் குழந்தை தனக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். குழந்தையை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் தர மறுக்கிறார்கள். தொலைக்காட்சியொன்றின் ‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சி மூலம் இந்த விவகாரம் வெளியுலகத்துக்கு தெரிகிறது. வழக்கு விசாரணைக்காக குழந்தை நல வாரியம், சிபிசிஐடி, கோர்ட் என எல்லாமும் உள்ளேவர சூழ்நிலை பரபரப்பாகிறது.

குழந்தை யாருக்கு சொந்தமாகிறது என்பது கிளைமாக்ஸ்.

இந்த கதைமூலம், குழந்தையை தத்தெடுப்பதில் அதற்கென இருக்கிற சட்ட திட்டங்களை முறையாகப் பின்பற்றாவிட்டால் என்னென்ன பின் விளைவுகள் எர்படும் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

ஷோபாவாக முல்லையரசி. மனிதாபிமானமற்ற வாழ்க்கைத் துணையிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் பரிதாபப் பிறவியாக கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஊதாரி, குடிகாரன், வாழ்க்கைத் துணையை உடல் சுகத்துக்காக மட்டுமே பயன்படுத்துபவன், பணத்துக்காக எதையும் செய்பவன் என கட்டமைக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார் தியாகியாக வரும் அசோக்.

பணவசதிக்குப் பஞ்சமில்லாத, குழந்தையில்லாத தம்பதியாக சமுத்திரகனி – அபிராமி. கிடைத்த குழந்தையை உருகி உருகி வளர்க்கிற பாசம், அந்த குழந்தைக்கு பெற்ற தாய் சொந்தம் கொண்டாடி வழக்கு தொடுக்கும்போது மனம் நொறுங்கி கலங்கி நிற்கும் சோகம் என நெகிழ வைக்கிறார்கள்.

லெஷ்மி ராமகிருஷ்ணன் ஏற்கனவே டிவி.யில் நடத்திய அதே குடும்பப் பஞ்சாயத்தை படத்திலும் நடத்தியிருக்கிறார் கூடுதல் சுவாரஸ்யத்தோடு!

‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் லெஷ்மி ராமகிருஷ்ணன், சொந்தமாக எந்த முடிவும் எடுக்காமல் நிகழ்ச்சியின் இயக்குநராக தான் சொல்வதை மட்டுமே செய்யவேண்டும் என வலியுறுத்துகிற ஈகோ பேர்வழியாக கெத்து காட்டியிருக்கிறார் பாவெல் நவகீதன்.

படத்தில் வரும் அத்தனைப் பேரும் தேர்ந்த நடிகர், நடிகைகள்… குழந்தை நல மையத்தின் முதன்மையதிகாரியாக மிஷ்கின், முறையற்ற செயலை துணிச்சலாக செய்கிற நர்ஸாக வினோதினி, நீதிபதியாக ஆடுகளம் நரேன், வழக்கறிஞராக அனுபமா குமார் என பாராட்டும்படி நடித்துள்ளவர்களின் பட்டியல் நீளம்.

படத்தில் கனமான காட்சிகளும் கண் கலங்க வைக்கும் காட்சிகளும் அணிவகுக்க, இளையராஜாவின் பின்னணி இசை அத்தனைக்கும் உயிரோட்டம் தந்திருக்கிறது. அந்த இசைஞானியின் இசையில் ‘தந்தை தாய்…’ பாடல் ரொம்ப நாட்களுக்கு மனதைவிட்டு நீங்காது.

ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கதையோட்டத்தின் வீரியத்துக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...
  ‘சொல்வதெல்லாம் உண்மை' என தொலைக்காட்சியில் தான் நடத்திய ஏடாகூடமான, எக்குத்தப்பான, வில்லங்க, விவகார குடும்பப் பஞ்சாயத்துகளிலிருந்து ஒரு உணர்வுபூர்வமான கதையைத் கையிலெடுத்து, அதற்கு அட்டகாசமான திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் லெஷ்மி ராமகிருஷ்ணன். வறுமைச் சுழலால் பணத்துக்கு ஆசைப்படும் ஷோபா - தியாகி தம்பதி தங்கள் குழந்தையை, கல்யாணமாகி பல வருடங்களாக குழந்தையில்லாத பணக்கார தம்பதிக்கு தூக்கிக் கொடுத்துவிடுகிறார்கள். ஒரு வருட காலத்தில் மனம் மாறுகிற ஷோபா,...‘ஆர் யூ ஒகே பேபி' சினிமா விமர்சனம்