Wednesday, April 24, 2024
spot_img
HomeMovie Reviewஆராய்ச்சி சினிமா விமர்சனம்

ஆராய்ச்சி சினிமா விமர்சனம்

Published on

மருத்துவ ஆராய்ச்சியும் காதல் உணர்ச்சியும் பின்னிப் பிணைந்த படம்.

எச் ஐ வி பாதிப்பால் உருவாகிற எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான மருத்துவ ஆராய்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிற அந்த இளைஞன், தன் உடம்பை பரிசோதனைக்கு உட்படுத்தவும் துணிகிறான். அது ஒருபக்கமிருக்க அவனுடன் இணைந்து பணிபுரிகிற பெண்ணை காதலிக்கவும் செய்கிறான்.

ஒரு கட்டத்தில், அவனால் காதலிக்கப்படுகிற அந்த பெண்ணுக்கு எச் ஐ வி பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. அவள் தனக்கு எய்ட்ஸ் நோய் வந்ததற்கு தன் காதலன்தான் காரணம் என சந்தேகப்படுகிறாள்.

கதையின் ஒரு பாதி இப்படி கடந்தோட உண்மையிலேயே அவளுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியதற்கு அந்த காதலன்தான் காரணமா? எய்ட்ஸை ஒழிப்பதற்கான ஆராய்ச்சி முடிவு என்னவானது? என்பதையெல்லாம் மறுபாதியில் தெரிந்துகொள்ள முடிகிறது.

வெடிமுத்து கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், மருத்துவ திறனாய்வு என பல பொறுப்புகளை ஏற்க படத்தை இயக்கியிருக்கிறார் ரவி செல்வன்.

வளைவு நெளிவுகளில் இளமை ததும்ப, புன்னகையால் கவர்ந்திழுக்கிறார் கதையின் மையப்புள்ளியாக வருகிற மனிஷாஜித். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையோடு அன்பை கலந்து பரிமாறுவதும், தான் எய்ட்ஸ் நோயாளி என தெரிந்தபின் கலங்கித் தவிப்பதும் காட்சிகளுக்கு அத்தனை பொருத்தம். பாடல்களில் கூடுதல் அழகாய் தரிசனம் தந்து கவனம் ஈர்க்கிறார்.

லட்சணமான முகத்தோடும் புசுபுசு கன்னங்களோடும் பளபள கண்ணாடி அணிந்த முத்து பாரதி பிரியன். படத்தில் மனிஷாவை ஒரு தலையாய் காதலிப்பது மட்டுமே அவருக்கான வேலை. அவர் அந்த வேலையை கண்ணும் கருத்துமாய் செய்கிற காட்சிகளில் தவறாமல் பாடல் வரிகள் ஒலித்துக் கொண்டேயிருக்க, மனிதர் உற்சாகம் தெறிக்கும்படி மெல்லிய சிரிப்பை உதிர்த்துக் கொண்டேயிருக்கிறார்.

கிராமத் தலைவராக வருகிற வெடிமுத்து வசனங்களை பேசும்போது பட்டாசு வெடிப்பது போன்ற அதிர்வை உருவாக்குகிறார். தலைமை ஆராய்ச்சியாளராகவும் அவரே வருகிறார்; பரவாயில்லை எனும்படி நடித்திருக்கிறார்.

தன்னை எய்ட்ஸ் நோயாளியாக்கிக் கொண்டு, தன் உடலிலுள்ள அணுக்கள் மூலமாக அந்த நோயிலிருந்து மீண்டு வர முடியும் என்பதை நிரூபிக்கத் துடிக்கும் பாத்திரத்தில் அனிஷ். இயல்பாக நடித்திருக்கிறார்; காதல் காட்சிகளில் அமைதியாக வெளிப்பட்டிருக்கிறார்.

செந்தீ, சிசர் மனோகர் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் அவரவர் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள்.

காதல் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட பாடல்களை மிதமான இசையில் தந்திருக்கும் விசித்திரன், எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான இரண்டு பாடல்களில் அமர்க்களமான இசையை கலந்திருக்கிறார். ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு நிறைவு.

உலகம், புதிது புதிதாய் உருவாகும் பல நோய்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழ்நிலையில் எய்ட்ஸ் நோய் ஒழிப்புக்கான ஆராய்ச்சி, அது சார்ந்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் என்றெல்லாம் இறங்கியடிக்கிற இந்த படம் மக்களிடம் அதிர்வலைகளை உருவாக்குமா என்பது கேள்விக்குறி. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உருவாக்கத்திலிருக்கும் நல்ல நோக்கத்துக்காக படக்குழுவை பாராட்டலாம்.

Latest articles

கானா பாலா குரலில், ஆதேஷ் பாலா நடிப்பில் பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம் பாடல் விரைவில் ரிலீஸ்!

'தீட்டு' என்ற பெயரில் பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. கானா...

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவில் ஜெய் ஹனுமான் படத்தின் போஸ்டர் வெளியீடு!

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடும் தருணத்தில் அந்த படத்தின் 2-ம் பாகமான ஜெய் ஹனுமான்...

அமீர் நடிக்க, ஆதம் பாவா இயக்கிய ‘உயிர் தமிழுக்கு’ மே 10-ம் தேதி ரிலீஸ்!

அமீர் கதாநாயகனாக நடிக்க, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள 'உயிர் தமிழுக்கு‘ படம் வரும் மே 10-ம் தேதி தியேட்டர்களில்...

More like this

கானா பாலா குரலில், ஆதேஷ் பாலா நடிப்பில் பெண்மையைப் போற்றும் ‘தீட்டு’ ஆல்பம் பாடல் விரைவில் ரிலீஸ்!

'தீட்டு' என்ற பெயரில் பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. கானா...

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவில் ஜெய் ஹனுமான் படத்தின் போஸ்டர் வெளியீடு!

ஹனுமான் படத்தின் 100 நாட்கள் நிறைவு விழாவினை கொண்டாடும் தருணத்தில் அந்த படத்தின் 2-ம் பாகமான ஜெய் ஹனுமான்...